இன்று வாழ்வா சாவா போட்டியில் பாகிஸ்தான் யுஏஇ அணிகள் மோதிக்கொள்ள இருக்கின்றன. இந்த நிலையில் இந்த போட்டியை வென்று அடுத்த சுற்றுக்கும் முன்னேறுவோம் என யுஏஇ தலைமை பயிற்சியாளர் லால்சந்த் ராஜ்புத் கூறியிருக்கிறார்.
இந்தியா இடம்பெற்று இருக்கும் பிரிவில் விளையாடிய 2 போட்டிகளிலும் வென்று இந்திய அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிட்டது. பாகிஸ்தான் மற்றும் யுஏஇ அணிகள் இரண்டு போட்டிகளில் ஒரு போட்டியை வென்று இருக்கின்றன. நிலையில் இன்று இரு அணிகளும் தங்களின் கடைசி போட்டியில் நேருக்கு நேராக மோதிக் கொள்கின்றன. இதில் வெல்லும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
திரும்பிப் பார்க்க வைத்த யுஏஇ
ஆசியக் கோப்பை தொடருக்கு முன்பாக யுஏஇ மண்ணில் நடைபெற்ற முத்தரப்பு டி20 தொடரில் uae அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக தோல்வி அடைந்திருந்தாலும் கூட சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தது. பாகிஸ்தான் அணியை வெல்லும் வாய்ப்பு யுஏஇ அணிக்கு இருக்கிறது.
மேலும் பாகிஸ்தான் அணி தனது கடைசி போட்டியில் இந்திய அணிக்கு எதிராக தோல்வி அடைந்தும், யுஏஇ அணியின் தனது கடைசி போட்டியில் ஓமான் அணிக்கு எதிராக வெற்றி பெற்றும் இந்த போட்டிக்கு வருகின்றன. தற்போது பாகிஸ்தான அணியை சுற்றி நிறைய எதிர்மறையான விஷயங்கள் சென்று கொண்டிருப்பதால் அந்த அணிக்கு இது பின்னடைவாக அமைகிறது.
பாகிஸ்தான் அணியை வீழ்த்துவோம்
இதுகுறித்து பேசி உள்ள யுஏஇ தலைமை பயிற்சியாளர் கூறும் பொழுது ” ஒரு வெற்றி என்பது எப்பொழுதும் முக்கியம். நாங்கள் தற்போது பெற்றிருக்கும் வெற்றி மொமெண்டத்தை அப்படியே எடுத்துச் செல்ல விரும்புகிறோம். நாங்கள் பாகிஸ்தான் அணிக்கு எதிராக முத்தரப்பு டி20 தொடரில் ஏற்கனவே விளையாடியிருக்கிறோம். எனவே நாங்கள் எந்த நிலையில் இருக்கிறோம் என்பது குறித்து எங்களுக்கு தெரியும். நாங்கள் அடுத்த சுற்றுக்கு செல்ல ஒரு குறிப்பிட்ட நாளில் நாங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினால் போதும். நிச்சயமாக எங்களால் அடுத்த சுற்றுக்கு போக முடியும்”
இதையும் படிங்க : அபிஷேக் ஷர்மா சிறந்த டி20 பேட்ஸ்மேனா?.. முதல் ஐந்து இடத்தில 3 இந்தியர்கள் இருக்காங்க – ஆகாஷ் சோப்ரா வெளியிட்ட பட்டியல்
“நாங்கள் ஒமான் அணிக்கு எதிராக மிகச்சிறந்த கிரிக்கெட்டை விளையாடி இருக்கிறோம். பாகிஸ்தான் அணிக்கு எதிராகவும் மீண்டும் சிறந்த கிரிக்கெட் கொண்டு வர முயற்சி செய்வோம். இது எங்களுக்கு வாழ்வா சாவா போட்டி. நாங்கள் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குள் வந்தால் அது மிகப்பெரிய விஷயமாக இருக்கும்” என்று கூறி இருக்கிறார்.






