6.40 கோடி.. லக்னோ அணியில் இருந்து நட்சத்திர வீரர் விலகல்.. திடீரென ஏற்பட்ட பெரிய பின்னடைவு

0
304
LSG

நடப்பு ஐபிஎல் தொடரை சந்திப்பதற்கு முன்பாகவே லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி துணை கேப்டன் பொறுப்பில் இருந்த குர்னால் பாண்டியாவை நீக்கிவிட்டு அந்த பொறுப்புக்கு நிக்கோலஸ் பூரனை கொண்டு வந்தது. இதற்கடுத்து தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ஆன்டி பிளவர் விலகிக் கொள்ள, புதிய தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவின் ஜஸ்டின் லாங்கர் அழைத்துவரப்பட்டார்.

மேலும் டிரேடிங் முறையில் ஆவேஸ் கானை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கொடுத்துவிட்டு, அந்த அணியில் இருந்து பேட்ஸ்மேன் தேவ்தத் படிக்கலை வாங்கினார்கள். மேலும் தமிழக இடதுகை சுழல் பந்து வீச்சாளர் மணிமாறன் சித்தார்த், வெஸ்ட் இண்டிஸ் அணியின் புதிய சூப்பர் ஸ்டார் ஷாமர் ஜோசப் என்ன வித்தியாசமான வீரர்களோடு வித்தியாசமான திட்டங்கள் உடன் லக்னோ அணி வந்தது.

- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக வெற்றி பெறக்கூடிய நிலையில் இருந்து தோல்வி அடைந்தது. இதற்கு அடுத்து பஞ்சாப் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு எதிராக சிறப்பாக விளையாடி அடுத்தடுத்து இரண்டு வெற்றிகளை பெற்று, தற்போது புள்ளி பட்டியலிலும் நான்காவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.

லக்னோ அணிக்கு தற்பொழுது இந்திய இளம் வேகப் பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் பெரிய பலத்தை சேர்ப்பவராக மாறி இருக்கிறார். அவருடைய சிறந்த அதிவேக பந்துவீச்சின் காரணமாகத்தான் இரண்டு போட்டிகளிலும் லக்னோ அணி வெற்றி பெற்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடந்து முடிந்த மினி ஏலத்தில் இடத்தில் 6.4 கோடி ரூபாய்க்கு குஜராத் டைட்டன்ஸ் அணியால் கழட்டி விடப்பட்ட இந்திய வேகப் பந்துவீச்சாளர் சிவம் மாவியை லக்னோ அணி வாங்கி இருந்தது. தற்பொழுது காயத்தின் காரணமாக அவர் ஒட்டுமொத்தமாக ஐபிஎல் தொடரை விட்டு விலகிக் கொண்டிருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : மயங்க் யாதவ் பவுலிங்ல இதை பண்ணுங்க போதும்.. ஈஸியா ரன் வரும் – ஹைடன் ஸ்மித் ஐடியா

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் “நான் தற்பொழுது ஐபிஎல் தொடரை தவிற விடுகிறேன். எனது அணிக்காக விளையாடி வெற்றி பெற்று தருவேன் என்று நினைத்தேன். ஆனால் துரதிஷ்டவசமாக காயம் அடைந்ததால் விலக வேண்டியதாக அமைந்திருக்கிறது. ஒரு கிரிக்கெட் வீரர் எப்பொழுதும் மனதளவில் வலிமையாக இருக்க வேண்டும். நீங்கள் மீண்டு வருவதற்கு என்ன செய்ய வேண்டும் என்கின்ற விஷயத்தில் ஆழமாக கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.