மயங்க் யாதவ் பவுலிங்ல இதை பண்ணுங்க போதும்.. ஈஸியா ரன் வரும் – ஹைடன் ஸ்மித் ஐடியா

0
148
Mayank

நடப்பு ஐபிஎல் சீசனில் இரண்டு போட்டிகளில் மட்டும் விளையாடி இருந்தாலும் கூட, லக்னோ அணியின் இளம் இந்திய வலதுகை வேகப் பந்துவீச்சாளர், தனது அதிவேகத்தின் காரணமாக பேட்ஸ்மேன்களை அலற விட்டு, ஒட்டுமொத்த ஐபிஎல் மட்ட கவனத்தையும் தன் பக்கம் திருப்பி இருக்கிறார்.

மயங்க் யாதவ் பஞ்சாப் அணிக்கு எதிரான அறிமுக போட்டியில் முக்கிய மூன்று விக்கெட்டுகள், இதே போல ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் முக்கிய மூன்று விக்கெட்டுகள் என, தன் தனித்திறமையான வேகத்தை பயன்படுத்தி வீழ்த்தி, லக்னோ அணியை வெற்றி பெற வைத்ததோடு, ஐபிஎல் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் ஆட்டநாயகன் விருது வென்ற ஒரே வீரர் என்கின்ற சாதனையையும் படைத்திருக்கிறார்.

- Advertisement -

இவருடைய பந்துவீச்சில் பேட்ஸ்மேன்கள் விளையாடுவதற்கு நேரமே கிடைப்பதில்லை. மேலும் இவரை தாக்கி விளையாடலாம் என்று பேட்ஸ்மேன்கள் நினைத்து முன் காலில் விளையாடும் பொழுது, அவர்கள் பேட்டை சுழற்றுவதற்கு முன்பாகவே பந்து வந்து வேகமாக மோதுவதால், உள் வட்டத்திலேயே கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்து விடுகிறார்கள்.

இப்போதைக்கு இவரை எப்படி விளையாடுவது? என்று ஐபிஎல் தொடரில் எல்லா அணிகளும் திட்டமிட்டு வருகின்றன. ஏனென்றால் இவரிடம் சிக்கினால் போட்டியையே இழக்க வேண்டிய சூழல் வந்து விடுகிறது. இரண்டு போட்டிகளிலும் இப்படித்தான் பஞ்சாப் மற்றும் ஆர்சிபி போட்டியை இவரிடம் இழந்து தோற்று இருக்கிறது. இவரை எப்படி சந்தித்து எளிதாக விளையாடுவது என ஆஸ்திரேலியாவின் ஹைடன் மற்றும் ஸ்மித் யோசனை கூறியிருக்கிறார்கள்.

இதுகுறித்து ஹைடன் கூறும் பொழுது “இப்பொழுது எல்லா அணிகளும், பேட்ஸ்மேன்களும் மயங்க் யாதவை எப்படி சந்தித்து விளையாடுவது என திட்டம் தீட்டி கொண்டு இருப்பார்கள். நீங்கள் அவருக்கு எதிராக பந்தின் லென்த்தில் விளையாட முயற்சி செய்தால் பந்து மிக வேகமாக வரும். எனவே அது கடினமாக இருக்கும். எனவே பந்தை உங்களிடம் வர அனுமதிக்க வேண்டும். முன்காலிலோ அல்லது பின்காலிலோ பந்தை வலுக்கட்டாயமாக அடிக்க முயற்சி செய்யக் கூடாது. அழுத்தத்தை உள்வாங்கிக் கொண்டு பந்தை வர அனுமதித்தால், பந்தின் வேகம் மற்ற விஷயங்களை பார்த்துக் கொள்ளும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : 2024 டி20 உலககோப்பை.. இந்திய செலக்டர்களை மயங்க் யாதவ் விடமாட்டார் – இந்திய முன்னாள் வீரர் பேச்சு

இதே விஷயம் குறித்து ஸ்மித் கூறும் பொழுது “நீங்கள் அவர் வீசிய பந்துகளில் ஒரு பந்தை கூட மெதுவான பந்தை பார்க்க முடியாது. ஒருவேளை இப்போதைக்கு அவர் மெதுவான பந்துகளை தனது ஆயுத களஞ்சியத்தில் வைத்திருக்கலாம். நீங்கள் பந்தின் லைனுக்கு செல்லலாம், பந்திற்கு இடம் கொடுத்து விளையாடலாம். இல்லையென்றால் பந்தை வர விட்டு விளையாடலாம்” என்று கூறி இருக்கிறார்.