ஐபிஎல் தொடரில் ஒரு குறிப்பிட்ட விதி பயிற்சியாளர்கள் மற்றும் தேர்வாளர்களுக்கு பெரிய தலைவலியாக இருப்பதாக லக்னோ அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்திருக்கிறார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ அணி முதல் ஏழு போட்டிகளில் சிறப்பான வெற்றிகள் பெற்று பிளே ஆப் சுற்றுக்கு செல்வதற்கு முன்னணியில் இருந்தது. இதற்கு அடுத்து கடைசி ஏழு போட்டிகளில் மிக மோசமாக விளையாடி பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது. இதனால் அணியின் உரிமையாளர் மற்றும் கேப்டன் கேஎல்.ராகுலுக்கு இடையே பெரிய மன வருத்தம் உருவாகி இருக்கிறது.
2024 வீரர்கள் தக்கவைப்பு
நடக்க இருக்கும் ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாக லக்னோ அணி நிக்கோலஸ் பூரன், மயங்க் யாதவ், ரவி பிஸ்னாய், மோசின் கான் மற்றும் ஆயுஸ் பதோனி என ஐந்து வீரர்களை தக்க வைத்திருக்கிறார். தற்போது அந்த அணியின் கையில் 69 கோடி ரூபாய் மீதம் பணம் இருக்கிறது. ஓரளவுக்கு பவுலிங் யூனிட் செட் ஆகி இருக்கும் நிலையில், பேட்டிங் யூனிட்டை உருவாக்க வேண்டிய அவசியத்தில் இருக்கிறது.
கடந்த ஆண்டு லக்னோ அணியின் மெண்டர் மற்றும் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து கம்பீர் மற்றும் ஆன்ட்டி பிளவர் இருவரும் விலகினார்கள். கடந்த ஆண்டு புதிய தலைமை பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கர் கொண்டுவரப்பட்டார். இந்த ஆண்டு மெண்டர் பொறுப்புக்கு இந்திய முன்னாள் வீரர் ஜாகிர் கான் கொண்டுவரப்பட்டிருக்கிறார்.
இந்த விதி தலைவலியாக இருக்கிறது
இது குறித்து பேசி இருக்கும் ஜஸ்டின் லாங்கர் கூறும் பொழுது “ஐபிஎல் தொடர் ஒரு பொழுதுபோக்கு கிரிக்கெட். எனவே இங்கு இம்பேக்ட் பிளேயர் விதி போன்றவை இருக்கலாம். ஆனால் ஆல்ரவுண்டர்கள் உருவாவது பறிக்கப்படும். ஆனால் ஸ்டோனிய்ஸ் போன்ற ஆல்ரவுண்டர்கள் உங்களிடம் இருக்கும் பொழுது அவர்கள் அவர்களுக்கான வாய்ப்பை பெற்று விடுவார்கள். ஆனாலும் இவர்களுக்கான அழுத்தம் எப்பொழுதும் இருக்கும்”
இதையும் படிங்க : முதல் டி20 ஏதோ ஜெயிச்சுட்டோம்.. ஆனா லக்ஷ்மன் சூர்யா செஞ்ச அது பெரிய தப்பு – பார்த்திவ் படேல் விமர்சனம்
“ஐபிஎல் கிரிக்கெட்டில் இம்பேக்ட் பிளேயர் விதியால் கிடைக்கக்கூடிய சுவாரசியத்தை தான் நாமெல்லாம் பார்க்க விரும்புகிறோம். இந்த வகை தொடர்களுக்கு இப்படியான விதிகள் தேவைப்படுகிறது. இப்ப சில நேரங்களில் வீரர்களுக்கும்நல்லதாக இருக்கிறது. ஆனால் ஒரு அணியை தேர்வு செய்வதில் தேர்வாளர்களுக்கும் பயிற்சியாளர்களுக்கும் இந்த விதி பெரிய தலைவலியாக இருக்கிறது. இதுதான் பிரச்சனை” என்று கூறியிருக்கிறார்.






