முதல் டி20 ஏதோ ஜெயிச்சுட்டோம்.. ஆனா லக்ஷ்மன் சூர்யா செஞ்ச அது பெரிய தப்பு – பார்த்திவ் படேல் விமர்சனம்

0
37
Parthiv

இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வெற்றி பெற்று இருந்தாலும் கூட கேப்டன் மற்றும் பயிற்சியாளர் ஒரு முக்கியமான தவறை செய்திருக்கிறார்கள் என ஆகாஷ் சோப்ரா மற்றும் பார்த்திவ் படேல் இருவரும் விமர்சனம் செய்திருக்கிறார்கள்.

நேற்று தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணிக்கு 50 பந்துகளில் 172 எடுத்து சஞ்சு சாம்சன் வெற்றிக்கு பெரிய பங்களிப்பை கொடுத்திருந்தார். பந்துவீச்சிலும் இந்திய சுழல் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு இருந்தார்கள்.

- Advertisement -

எதிர்பார்க்காத இந்திய பிளேயிங் லெவன்

நேற்று இந்திய அணியின் பிளேயிங் லெவனில் மூன்று சுழல் பந்துவீச்சாளர்கள் இடம்பெற்று இருந்தார்கள். அத்துடன் அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா மற்றும் சூரியகுமார் யாதவ் என மூன்று பகுதி நேர சுழல் பந்துவீச்சாளர்கள் இடம் பெற்று இருந்தார்கள். இந்த வகையில் மொத்தம் நேற்று இந்திய பிளேயிங் லெவனில் மட்டும் ஆறு சுழல் பந்துவீச்சு விருப்பங்கள் இருந்தது.

மேலும் வேகப் பந்துவீச்சு ஆல் ரவுண்டராக ஹர்திக் பாண்டியா இடம்பெற்று இருந்தார். இது மட்டும் இல்லாமல் இரண்டு பிரதான வேகப்பந்துவீச்சாளர்களும் இருந்தார்கள். இத்தனை பந்துவீச்சு விருப்பங்கள் இருந்த பொழுதும் இந்திய அணியின் பேட்டிங் யூனிட்டில் ஏழாம் இடம் வரையே பேட்டிங் செய்யக் கூடிய வீரர் இருந்தார். பேட்டிங் நீளத்தை 8 வரையில் அமைத்து வந்த இந்திய டி20 அணி நிர்வாகம் திடீரென மாற்றம் செய்தது.

- Advertisement -

இது மோசமாக மாறி இருக்கலாம்

இது குறித்து ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது “இந்திய அணிக்கு எட்டாவது இடத்தில் ஒரு பேட்டிங் செய்யக்கூடிய வீர தேவை என்றும் அதற்கு ரமன்தீப் சிங் சரியாக இருப்பார் என்றும், நாங்கள் இந்த தொடருக்கு முன்பிருந்து கூறி வருகிறோம். இந்த ஆடுகளத்தில் மூன்று சுழல் பந்துவீச்சாளர்கள் விளையாட வேண்டிய தேவை இல்லை. மேலும் அக்சர் படேல் ஒரே ஒரு ஓவர் மட்டுமே வீசி சரிவை சந்தித்தார். இதை யாராலும் தடுக்க முடியவில்லை” என்று கூறினார்.

இதையும் படிங்க : சூர்யா சொன்ன அந்த வார்த்தை.. என் கேரியரில் எந்த கேப்டனும் சொல்லலை – சஞ்சு சாம்சன் பேட்டி

இதை ஏற்றுக் கொண்டு பேசிய பார்த்திவ் படேல் கூறும்பொழுது “உங்களுக்கு எப்பொழுதும் எட்டாவது இடத்தில் ஓரளவுக்கு பேட்டிங் செய்யக்கூடிய வீரர் தேவையாக இருக்கிறார். தற்போது டி20 கிரிக்கெட்டில் அந்த தேவை உருவாகிவிட்டது. நேற்று இந்திய அணிக்கு எட்டாவது இடத்தில் அந்த மாதிரியான ஒரு வீரர் இல்லாதது மோசமாக மாறியிருக்கலாம். நீங்கள் ரமன்தீப்பை அணியில் சேர்த்தவுடன், அவரை விளையாடவும் வைத்திருக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -