ஐபிஎல் தொடரில் வீரராக ரிஷப் பண்ட் மற்றும் உரிமையாளராக தான் இருவரும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டவர்களாக இருக்கிறோம் என லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா தெரிவித்திருக்கிறார்.
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் போது லக்னோ அணியின் கேப்டன் கேஎல்.ராகுல் இடம் நடு மைதானத்தில் சஞ்சீவ் கோயங்கா வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது பலரது விமர்சனங்களையும் கொண்டு வந்தது. வீரர்களை அணி உரிமையாளர்கள் இப்படி நடத்துவது மிகவும் தவறு என பலரும் கண்டனம் தெரிவித்தார்கள்.
நாங்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இருக்கிறோம்
இது குறித்து ஆகாஷ் சோப்ரா யூட்யூப் சேனலில் பேட்டி அளித்திருக்கும் சஞ்சீவ் கோயங்கா கூறும் பொழுது ” கிரிக்கெட் வீரராக ரிஷப் பண்ட் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இருக்கிறார், அணி உரிமையாளராக நான் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இருக்கிறேன். நீங்கள் இதை எதிர் கொள்ள வேண்டும். எதிர் கொள்ளாமல் கடந்து செல்லும் சூழ்நிலையும் இருக்கிறது. எது சரி எது தவறு என்பதை காலம் முடிவு செய்து கொள்ளும்”
“இங்கு எங்கள் பற்றி ஒரு கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒருவருக்கு பிஆர் இருக்கிறது. அதன் மூலம் இப்படியான செய்திகள் பரப்பப்படுகிறது. பரவாயில்லை செய்து கொள்ளட்டும். ஆனால் இது நீண்ட காலத்திற்கு நிலைக்காது. அதே சமயத்தில் இதை உங்கள் மனதை பாதிக்க விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்”
ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது
“நாங்கள் ஏலத்தில் ரிஷப்பை வாங்கியதுமே கேப்டன் ஆக்குவது என்கின்ற முடிவுக்கு வந்து விட்டோம். ஏனென்றால் அவர் போன்று வெற்றி பெறுவதற்கான ஆர்வம் கொண்ட சிலரை மட்டுமே நான் பார்த்திருக்கிறேன். எனக்கு அவரைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அவர் விளையாடும் பொழுது அதன் விதம் மற்றும் அவர் உடல் மொழியில் சில நுணுக்கங்களை பார்த்தேன். அது என்னைக் கவர்ந்தது”
இதையும் படிங்க : ரிஸ்வான் கிரவுண்டுக்கு வந்து உங்கள திட்டுவேன்.. இந்த தப்பை மட்டும் செய்யாதிங்க – பசித் அலி விமர்சனம்
“அவர் எப்பொழுதும் அணியை தன்னிச்சையாக முன் நிறுத்துகிறார். அது சிறந்த குணம் என்று நான் உணர்ந்தேன். அவருக்கு ஒரு அபாயகரமான விபத்து ஏற்பட்டது. அதைக் கடந்து சிறப்பாக வருவதற்கு அவரிடம் மன உறுதியும் ஒழுக்கமும் இருந்தது. அவர் மீண்டு வந்திருக்கும் விதம் வெற்றியாளர்களுக்கான அடையாளம்” என்று கூறி இருக்கிறார்.






