சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்பாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் ஒரு முக்கிய வேலையை செய்ய வேண்டும் என்றும், இல்லையென்றால் தான் மைதானத்திற்கு வந்து அவரை திட்ட நேரிடும் என்றும் பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி எச்சரிக்கை செய்திருக்கிறார்.
மேலும் அவர் பேசும் பொழுது தற்போதைய பாகிஸ்தான் அணி அரையிறுதியை எட்டுவது மிகவும் கடினமானது என்றும், பாபர் அசாமை வைத்து சில பரிசோதனை முயற்சிகளை செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கடுமையாக பேசியிருக்கிறார்.
பாபரை பலியாடு ஆக்க வேண்டாம்
நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாபர் அசாமை துவக்க வீரராக விளையாட வைக்க ஆலோசனை நடைபெற்று வருவதாக செய்திகள் சென்று கொண்டிருக்கிறது. இப்படி செய்வது பாகிஸ்தான் அணிக்கு பெரிய பின்னடைவை உண்டாக்கிவிடும் என பசித் அலி கருதுகிறார்.
இதுகுறித்து அவர் பேசும்பொழுது “தயவுசெய்து பாபர் அசாமை பலியாடு ஆக்காதீர்கள். ஒரு நாள் போட்டியில் இரண்டு பக்கத்திலும் புதிய பந்துகள் இருக்கும் என்று நமக்கு தெரியும். முதல் போட்டியாக நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடும் பொழுது அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் அணிக்கு 145 கிலோ மீட்டர் வேகத்தில் வந்து வீசுவார்கள். அப்படி இருக்கும் பொழுது துவக்க வீரராக பாபர் அசாம் எடுத்ததும் வெளியேறினால் அரங்கத்தில் மூச்சே நின்று விடும். எனவே இதை செய்ய வேண்டாம்”
மைதானத்திற்கு வந்து திட்டுவேன்
“ரிஸ்வானுக்கு என்னிடம் ஒரு செய்தி இருக்கிறது. அது என்னவென்றால் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்பாக தகுதியான வீரர்களை தேர்வு செய்வதை அவர் உறுதி செய்ய வேண்டும். எங்காவது லீக்குகளில் சிலர் நன்றாக விளையாடுவதை வைத்து அணிக்கு தேர்வு செய்யக்கூடாது. இப்படி ஏதாவது நடந்தால் நான் மைதானத்திற்கு நேரடியாக சென்று அவரை திட்ட வேண்டியது இருக்கும்”
இதையும் படிங்க : முதல் டி20 இந்தியா அதிர்ஷ்டத்தால் ஜெயிச்சது.. அடுத்து 40/6னு செய்வோம் – ஜோப்ரா ஆர்ச்சர் சவால்
“தற்போது பாகிஸ்தான் அணி சாம்பியன்ஸ் டிராபியில் செமி பைனலுக்கு செல்வது கடினம் என்று வெளியில் பேசப்படுகிறது. நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டி மிகவும் கடினமான ஒன்றாக அமையும். மேலும் இந்திய அணியில் பும்ரா இல்லை என்றால்தான் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.






