கேப்டன் ஆனதும் முதல் பிரச்சனை.. லக்னோ அணியின் ஸ்டார் பவுலர் காயம்.. சிக்கலை சமாளிப்பாரா ரிஷப் பண்ட்.?

0
188

18 வது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் திருவிழா இன்னும் சில தினங்களில் நடைபெற இருக்கும் நிலையில், ரிஷப் பண்ட் கேப்டனாக நியமிக்கப்பட்ட லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணி தற்போது சிக்கலில் சிக்கியுள்ளது.

அந்த அணியின் நட்சத்திர பவுலர் இந்த சீசனின் முதல் பாதி வரை விளையாட மாட்டார் என தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

- Advertisement -

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணி ஓரளவு நன்றாக விளையாடி குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்று தனது திறமையை வெளிப்படுத்தியது. இந்த நிலையில் கேஎல் ராகுல் லக்னோ அணியால் தக்க வைக்கப்படாமல் வெளிவிடப்பட, அவருக்கு பதிலாக கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் ரிஷப் பண்ட்டை லக்னோ அணி 27 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. ஏலத்தில் எடுத்த பின்னர் அவரையே அதிகாரப்பூர்வ கேப்டனாகவும் அறிவித்தது.

இந்த நிலையில் ஏற்கனவே அந்த அணியில் தக்க வைக்கப்பட்ட வீரர்களாக நிக்கோலஸ் பூரான் மற்றும் மயங்க் யாதவ் போன்ற திறமையான வீரர்கள் அந்த அணியில் இருக்க, மேலும் பல நல்ல வீரர்களை வாங்கி அணியை வலுவாக கட்டமைத்துள்ளது. இந்த சூழ்நிலையில் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி லக்னோ அணிக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய மயாங்க் யாதவ் பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தனது அதிவேக பந்துவீச்சால் ஆறு விக்கெட்டுகள் வீதி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்.

- Advertisement -

அதற்குப் பிறகு காயத்தால் அவர் மீதம் உள்ள போட்டிகளில் விளையாடாமல் போக, லக்னோ அணியும் அடுத்த சுற்றுக்கு முன்னேறவில்லை. இந்த நிலையில் காயத்தில் இருந்து மீண்டு வந்த அவர் இந்திய அணியில் வங்கதேச அணிக்கு எதிரான தொடருக்கு அறிமுகமானார். மூன்று போட்டிகள் விளையாடிய அவர் நான்கு விக்கெட்டுகள் வீழ்த்திய நிலையில் அதற்குப் பிறகு இங்கிலாந்து தொடருக்கு அவர் விளையாடவில்லை. முதுகு பக்கத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக ஓய்வில் இருந்து வரும் நிலையில் தற்போது ஐபிஎல் தொடரில் முதல் பாதியில் அவர் கிடைக்க மாட்டார் என்ற தகவலும் வெளிவந்துள்ளது.

இதையும் படிங்க:ஒருத்தரை திட்டனும் பெருமையா பேசணும்னு அவசியம் இல்லை.. நான் அப்படி பேச காரணமே இதுதான் – ரோஹித் உணர்ச்சி பேட்டி

இதுகுறித்து லக்னோ அணியின் நிர்வாக இயக்குனர் ஜாகிர் கான் கூறும் போது ” நாங்கள் இந்த சீசனில் அவரை விளையாட வைக்க எவ்வளவு ஆர்வமாக இருக்கிறோமோ, அதே நேரத்தில் அவர் விளையாடுவதற்கு 100 முதல் 150 சதவீதம் உடல் தகுதியுடன் இருக்க வேண்டும். எனவே இந்த சீசன் தொடங்குவதற்குள் எங்களால் முடிந்த அனைத்து வேலைகளையும் செய்வோம்” என்று ஜாஹிர் கான் பேசியிருக்கிறார். ரிஷப் பண்ட் கேப்டனாக பொறுப்பேற்க உள்ள இந்த தொடரில், அணியின் முக்கிய பவுலர் வெளியேறி இருப்பது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. மயாங்க் யாதவை இந்த சீசனில் லக்னோ அணி 11 கோடி ரூபாய்க்கு தக்க வைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -