எல்லா நேரமும் அவங்களையே நம்ப முடியாது.. ஆரம்பத்திலேயே இந்த தப்பை செஞ்சுட்டோம் – லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட்

0
113

ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 54ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

தோல்விக்கான காரணம் குறித்து லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

37 ரன்னில் லக்னோ தோல்வி

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் குவித்தது. பஞ்சாப் பணியை பொறுத்தவரை அதிகபட்சமாக பிரப் சிம்ரன் சிங் 48 பந்துகளை எதிர்கொண்டு 91 ரன்கள் குவித்தார். விக்கெட் கீப்பர் ஜாஸ் இங்கிலீஷ் 14 பந்துகளில் 30 ரன்கள், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 25 பந்துகளில் 45 ரன்கள் குவித்தார்.

அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி லக்னோ அணி களம் இறங்கியது. இந்த முறை தொடக்க வீரர்கள் விரைவாக ஆட்டம் இழந்து வெளியேற, அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் 17 பந்துகளை எதிர்கொண்டு 18 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதற்குப் பிறகு இளம் வீரர் ஆயுஸ் பதோனி 40 பந்துகளை எதிர்கொண்டு 70 ரன்கள் குவிக்க, இறுதியில் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் மட்டும் எடுத்து 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

- Advertisement -

அவர்களை நம்ப முடியாது

இந்த தோல்விக்கான காரணம் குறித்து ரிஷப் பண்ட் பேசும்போது “இது நிச்சயம் பஞ்சாப் அணி குவித்தது அதிக ரன்கள் ஆகும். தவறான நேரத்தில் முக்கியமான கேட்ச்கள் கோட்டை விடுவது அது பெரிய பிரச்சனை உருவாக்கும். நாங்கள் துவக்கத்திலேயே சரியான லைன் அண்ட் லெந்தை தேர்ந்தெடுத்து சரியான பந்துகளை வீசவில்லை. எங்கள் பிளே ஆப் கனவு இன்னும் உயிரோடு உள்ளது. நாங்கள் அடுத்த மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றால் அதனை நிச்சயமாக மாற்ற முடியும். டாப் ஆர்டர் நன்றாக செயல்படும் போது அனைத்து விஷயங்களும் சாத்தியமாகும்.

இதையும் படிங்க:2026 பத்தி யோசிக்காம.. ஐபிஎல் வேணாம்னு ஹாரி ப்ரூக் பெரிய தப்பு பண்ணிட்டாரு.. மறைமுக ஆதங்கத்தை வெளிப்படுத்தும் கெவின் பீட்டர்சன்

ஆனால் எப்போதுமே அவர்கள் அடிப்பார்கள் என்று நம்ப முடியாது. நாங்கள் போட்டியை ஆழமாக எடுத்துச் சென்று முன்னேற வேண்டும். ஒவ்வொரு முறையும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் உதவுவார்கள் என்று நம்ப முடியாது. முதலில் சொன்னது போல இந்த போட்டியில் நாங்கள் எடுக்க வேண்டிய ரன்கள் அதிகமாக இருந்தது. அது எங்களை காயப்படுத்தியதால் நாங்கள் விரைவாக விக்கெட்டுகள் எந்த தோல்வி அடைந்தோம்” என ரிஷப் பண்ட் பேசியிருக்கிறார்

- Advertisement -