2026 பத்தி யோசிக்காம.. ஐபிஎல் வேணாம்னு ஹாரி ப்ரூக் பெரிய தப்பு பண்ணிட்டாரு.. மறைமுக ஆதங்கத்தை வெளிப்படுத்தும் கெவின் பீட்டர்சன்

0
318

ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் திருவிழா தற்போது நடைபெற்று வரும் நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக இங்கிலாந்து அணியை சேர்ந்த மிடில் வரிசை பேட்ஸ்மேன் ஹாரி ப்ரூக் வாங்கப்பட்ட நிலையில் தனிப்பட்ட காரணங்களுக்காக ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

அவருக்கு இரண்டு ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் விளையாட தடை விதிக்கப்பட்ட நிலையில் கெவின் பீட்டர்சன் ஹாரி ப்ரூக் குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

இரண்டு ஆண்டுகள் தடை

இந்த ஐபிஎல் தொடரில் அக்சார் பட்டேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சிறப்பாக செயல்பட்டு அதிக வெற்றிகளை பெற்று வருகிறது. ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேற இருக்கும் அணிகளில் ஒன்றாக கருதப்படும் டெல்லி அணி, 10 போட்டிகள் விளையாடி 6 போட்டியில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் 5வது இடத்தில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் கடந்த மெகா ஏலத்தில் 6.25 கோடி ரூபாய்க்கு டெல்லி அணியால் வாங்கப்பட்டார்.

ஆனால் இறுதியில் ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக தனிப்பட்ட காரணங்களால் வெளியேறுவதாக அறிவித்த நிலையில், அவருக்கு அடுத்த இரண்டு ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் டெல்லி அணியின் ஆலோசகரான இங்கிலாந்தைச் சேர்ந்த கெவின் பீட்டர்சன் ஹாரி எடுத்தது தவறான முடிவு எனவும், இந்தியாவில் அவர் விளையாடியிருந்தால் சுழற் பந்துவீச்சுக்கு எதிராக தனது குறையை நிவர்த்தி செய்து இருப்பார் என சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

அவரோடு பணியாற்ற விரும்பினேன்

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது ” இந்தியாவில் அவருக்கு தொழில்நுட்பக் குறைபாடுகள் இருக்கின்றன. நான் அவரோடு பணியாற்ற விரும்பினேன், ஆனால் மக்கள் சொந்த வாழ்க்கையில் தங்களது விருப்பங்களை தேர்ந்தெடுக்கிறார்கள். அதனை மதிக்க வேண்டும். ஆனால் இந்தியாவில் அவருக்கு சுழற் பந்து வீச்சுக்கு எதிராக பெரிய குறைபாடு இருக்கிறது. எனவே இந்த இரண்டு மாதங்கள் அவர் இங்கு தங்கி விளையாடி தனது குறையை சரி செய்து இருந்தால் அடுத்தது என்ன நடக்கும் என்று யோசித்துப் பாருங்கள்” என கெவின் பீட்டர்சன் பேசியிருக்கிறார்.

இதையும் படிங்க:பேசவே தயக்கமா இருக்கு.. என்னோட தப்பான இந்த கணக்கே ராஜஸ்தான் அணியின் தோல்விக்கு காரணம் – கேப்டன் ரியான் பராக்

அதாவது அடுத்த வருடம் இந்தியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ள நிலையில், ஹாரி ப்ரூக் ஐபிஎல் தொடர் விளையாடியிருந்தால் தனது குறையை பெரிய அளவில் சரி செய்திருக்கலாம் என கெவின் பீட்டர்சன் மறைமுகமாக கூறியிருக்கிறார். இங்கிலாந்து அணியின் வெள்ளை பந்து தொடரிலிருந்து ஜாஸ் பட்லர் கேப்டன் பதவியை விட்டு வெளியேறிய நிலையில் அவருக்கு பதிலாக தற்போது ஹாரி ப்ரூக் நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -