ஐபிஎல் 205 கிரிக்கெட் லீக் தொடரின் ஏழாவது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணிகள் மோதின.
இதில் சிறப்பாக விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி சிறப்பான வெற்றியை பதிவு செய்தது.
லக்னோ ஹைதராபாத் மோதல்
ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் சன் ரைசர்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். ஏற்கனவே இதே மைதானத்தில் விளையாடி முதல் வெற்றியைப் பெற்ற நம்பிக்கையில் சன்ரைசர்ஸ் அணி பேட்டிங் களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் ஹெட் ஆகியோர் களம் இறங்கிய நிலையில் அபிஷேக் ஷர்மாவை 6 ரன்னில் சர்துல் தாக்கூர் வீழ்த்தினார்.
அடுத்த பந்தியிலேயே இசான் கிசானையும் வீழ்த்த, நித்திஷ் ரெட்டி மற்றும் ட்ராவிஸ் ஹெட் கூட்டணி ஓரளவு நிலைத்து நின்று விளையாடியது. இதில் ஹெட் 47 ரன்னில் பிரின்ஸ் யாதவின் அபாரமான போல்டால் ஆட்டம் இழந்து வெளியேறினார். அதற்குப் பின்னர் இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய அன்கித் வர்மா 13 பந்துகளில் 5 சிக்சர்கள் அடித்து 36 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதனால் சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தாக்கூர் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
பூரான் அபார ஆட்டம்
அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி லக்னோ அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் ஏடன் மார்க்ரம் ஒரு ரன்னில் வெளியேற, பூரான், மிச்சல் மார்ஸ் ஜோடி ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை பந்தாடியது. இதில் ஒரு முனையில் ருத்ர தாண்டவம் ஆடிக் கொண்டிருந்த பூரான் 26 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 6 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸ் என 70 ரன்கள் குவித்தார்.
இதையும் படிங்க:கேப்டன் பதவியை விட்டு விலகுகிறாரா ரோகித்?. ஸ்ரேயாஸ் வருணுக்கு முக்கிய முடிவை எடுக்கும் பிசிசிஐ.. வெளியான புது தகவல்
மேலும் மற்றொரு தொடக்க வீரர் மிச்சல் மார்ஸ் சிறப்பாக விளையாடி 31 பந்துகளில் 52 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். இதற்குப் பின்னர் வந்த ரிஷப் பண்ட் 15 ரன்னில் வெளியேறி ஏமாற்றம் அளிக்க, மிடில் வரிசையில் வந்த அப்துல் சமத் எட்டு பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 2 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸ் என 22 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் லக்னோ அணியை வெற்றி பெற வைத்தார். இதனால் லக்னோ அணி 23 பந்துகளை மீதம் வைத்து ஐந்து விக்கெட்டைகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.






