இந்திய கிரிக்கெட் அணி வருகிற ஜூன் மாதத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இந்த சூழ்நிலையில் வருகிற 29ஆம் தேதி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், எதிர்கால டெஸ்ட் கேப்டன் மற்றும் வரவிருக்கும் சீசனுக்கான மத்திய ஒப்பந்த பட்டியலை இறுதி செய்யும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிசிசிஐ முக்கிய முடிவு
இந்திய கிரிக்கெட் அணியை பொறுத்தவரை கடந்த காலங்களில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் பெரிய தோல்வியை சந்தித்து விமர்சனங்களை எதிர்கொண்டது. சொந்த மண்ணில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை ரோகித் சர்மா தலைமையில் மூன்று போட்டிகளிலும் இழந்துள்ள இந்திய அணி, அதற்கு பிறகு நடைபெற்ற ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்து மோசமான விமர்சனத்தை எதிர்கொண்டது.
மேலும் ரோகித் சர்மாவிற்கு தற்போது 37 வயதாவதால் அவர் விரைவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரோகித் சர்மா ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி பும்ரா கேப்டனாக இந்திய அணிக்கு செயல்பட்டார். ஆனால் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என்று தகவல்கள் வெளிவரும் நிலையில் அதற்கான இறுதி முடிவை வருகிற 29ஆம் தேதி பிசிசிஐ எடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
இந்திய எதிர்கால டெஸ்ட் கேப்டன்
மேலும் ரோகித், விராட் கோலி மற்றும் ஜடேஜா ஆகியோர் சம்பளப் பட்டியலில் ஏ ப்ளஸ் பிரிவில் இருக்கும் நிலையில், கடந்த வருடம் சம்பள பட்டியலை இழந்த ஸ்ரேயாஸ் ஐயர் இந்த வருடம் இந்திய அணிக்காக அபாரமாக செயல்பட்டு வரும் நிலையில் அவர் திரும்பவும் மத்திய ஒப்பந்தத்தை பெறுவார். அதேபோல சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறப்பாக செயல்பட்ட வருண் சக்கரவர்த்தி புதிதாக இந்த பட்டியலில் இணைகிறார்.
இதையும் படிங்க:ஏலத்தில் யாருமே வாங்கல.. ஆனா இப்போ ஊதா தொப்பியே இவர்கிட்டதான்.. சன்ரைசர்சை ஊதி தள்ளிய லார்ட் தாகூர்
எனவே பிசிசிஐ எதிர்கால இந்திய டெஸ்ட் கேப்டன் மற்றும் புதிய சம்பளப் பட்டியலை வருகிற 29ஆம் தேதி வெளியிட உள்ளது. எனவே ரோஹித் சர்மாவிற்கு பிறகு இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டன் யார்? என்கிற எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இருப்பினும் ரோஹித் சர்மாவே இன்னும் சில காலம் தொடர்வாரா? அல்லது புதிய கேப்டன் அறிவிக்கப்படுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.






