நேற்று நடந்து முடிந்த ஐபிஎல் மினி ஏலத்தில் லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் சிஎஸ்கே கழட்டிவிட்ட ஒரு வீரரை மிகவும் விருப்பியதாக அந்த அணியின் சஞ்சீவ் கோயங்கா கூறியிருக்கிறார்.
இந்த ஐபிஎல் மினி ஏலத்தில் அதிவேகப்பந்துவீச்சாளர் அன்றிச் நோர்க்கியாவை அவரது அடிப்படை விலையான இரண்டு கோடி ரூபாய்க்கு லக்னோ அணி வாங்கிக் கொண்டது. இது அவர்களுக்கு ஏலத்தில் மிகச் சிறந்த வாங்குதலாக அமைந்தது.
மேலும் அடுத்த வருடம் ஐபிஎல் தொடர் என்பது தனக்கு திருமணம் இருப்பதால் குறைந்தது 4 போட்டிகளில் மட்டுமே தன்னால் விளையாட முடியும் என ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ஜோஸ் இங்லீஷ் தெரிவித்து இருந்தார். இருந்தபோதிலும் லக்னோ அவருக்காக 8 கோடி ரூபாய்க்கு மேல் கொடுத்து வாங்கி இருக்கிறது.
நேற்றைய ஏலத்தில் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் சிஎஸ்கே கழட்டிவிட்ட மதிஷா பதிரனா 18 கோடி ரூபாய்க்கு சென்று இருந்தார். இவரை வாங்குவதற்கு கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகள் முதலில் போட்டியிட்டன. இடையில் புகுந்த லக்னோ அணி 17.80 கோடி ரூபாய் வரையில் போராடியது. அவர்களிடம் அப்போது அவ்வளவு பணம்தான் இருந்தது. இறுதியில் கொல்கத்தா அணி அவரை 18 கோடி ரூபாய்க்கு வாங்கிக் கொண்டது.
இது குறித்து சஞ்சீவ் கோயங்கா கூறும் பொழுது “எங்களுடைய கேப்டன் மற்றும் துணை கேப்டன் இருவரும் பதிரனா மீது மிகவும் ஆர்வமாக இருந்தார்கள். நானும் அவரை வாங்க வேண்டும் என மிகவும் விரும்பினேன். அதே சமயத்தில் அன்றிச் நோர்க்கியாவும் எங்கள் திட்டத்தில் இருந்தார். ஆனால் பதிரனா எங்களுடைய முன்னுரிமையாக இருந்தார். மேலும் எங்களிடம் அப்பொழுது 17.80 கோடி ரூபாய் மட்டுமே இருந்தது. நாங்கள் முழுமையாக சென்றோம் அவரை வாங்க முடியவில்லை”
இதையும் படிங்க : 326-8.. இங்கிலாந்து மோசமான பிளான்.. வச்சு செய்த ஆஸி.. புதிய ஹீரோ அலெக்ஸ் கேரி அபார சதம்
“அதே சமயத்தில் நாங்கள் ஏலத்தில் வாங்கிய வீரர்களில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். ஒரு உலகத்தரமான லெக் ஸ்பின்னர் வேண்டும் என்று நினைத்தோம், எனவே நாங்கள் ஹசரங்காவை வாங்கி இருக்கிறோம். நாங்கள் குறிவைத்த மூன்று வகையான வீரர்களையுமே நாங்கள் பெற்று விட்டோம்” என்று கூறி இருக்கிறார்.