இங்கிலாந்து உள்நாட்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடரான கவுண்டி டிவிஷன் 2 தொடரில் லீசெஸ்டர்சையர் அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் லூயிஸ் கிம்பர் சசக்ஸ் அணியின் வலது கை வேகப்பந்து வீச்சாளர் ஒல்லி ராபின்சன் பந்துவீச்சில் ஒரே ஓவரில் 43 ரன்கள் அடித்து உலகச் சாதனை படைத்திருக்கிறார்.
தற்போது இங்கிலாந்தில் கவுண்டி டிவிஷன் 2 டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் லீசசெஸ்டர்சையர் அணிக்காக விளையாடும் லூயிஸ் கிம்பர் அதிரடியான பேட்டிங் மூலம் முதல் தர கிரிக்கெட்டில் உலக சாதனைகள் இரண்டு படைத்திருக்கிறார்.
இந்த போட்டியில் ஒல்லி ராபின்சன் வீசிய ஓவரில் 6,6nb,4,6,4,6nb,4,6nb,1 என ருத்ர தாண்டவம் விளையாட அந்த ஓவரில் 43 ரன்கள் வந்தது. இந்த வகையில் உள்நாட்டு ஃபர்ஸ்ட் கிளாஸ் வரலாற்றில் நாட்டிங்ஹாம்சையர் அணியின் கேரி சோபர்ஸ் கிளாமோர்கன் அணிக்கு எதிராகவும், பம்பாய் அணியின் வீரர் ரவி சாஸ்திரி பரோடா அணிக்கு எதிராகவும் ஒரு ஓவரில் 36 ரன்கள் எடுத்திருந்த உலக சாதனையை முறியடித்திருக்கிறார். மேலும் 143 வருட கவுண்டி கிரிக்கெட் வரலாற்றில் புதிய உலக சாதனையை படைத்திருக்கிறார்.
மேலும் ஃபர்ஸ்ட் கிளாஸ் வரலாற்றில் ஒரு ஓவருக்கு 38 ரன்கள் விட்டுக் கொடுத்ததே மோசமான சாதனையாக இருந்து வந்தது. தற்பொழுது ஒரு ஓவரில் 43 ரன்கள் கொடுத்து ஒல்லி ராபின்சன் அந்த மோசமான சாதனையை முறியடித்து தன்னுடைய பெயரை பதிவு செய்திருக்கிறார்.
மேலும் இரண்டாவது இன்னிங்சில் இந்த சாதனையை செய்த லூயிஸ் கிம்பர் 127 பந்துகளில் 243 ரன்கள் குவித்து அதிவேக இரட்டை சதத்தை கவுண்டி வரலாற்றில் பதிவு செய்தார். மேலும் இந்த போட்டியில் 18வது சிக்சரை அடித்து, ஸ்டோக்ஸ் ஒரு இன்னிங்ஸில் அடித்திருந்த அதிக சிக்ஸர் சாதனையையும் முறியடித்தார்.
இதையும் படிங்க : ஜிம்பாப்வே தொடர்.. நிதீஷ் குமார் காயம்.. சிஎஸ்கே வீரருக்கு அடித்த அதிர்ஷ்டம்.. முக்கிய வாய்ப்பை பயன்படுத்துவாரா?
இவரது அதிரடியான பேட்டிங் காரணமாக லீசெஸ்டர்சையர் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 80.4 ஓவர்களில் 445 ரன்கள் அதிரடியாக சேர்த்தது. ஆனாலும் இந்த சிறப்பு வாய்ந்த பரபரப்பான போட்டியில் துரதிஷ்டவசமாக லூயிஸ் கிம்பரின் லீசெஸ்டர்சையர் அணி சசக்ஸ் அணியிடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
LOUIS KIMBER HAS TAKEN 43 OFF AN OVER pic.twitter.com/kQ4cLUhKN9
— Vitality County Championship (@CountyChamp) June 26, 2024






