கம்மி காசு நிறைய நாள்.. ஆனாலும் இலங்கை லீக்கில் விளையாடும் பாபர்.. காரணம் என்ன? – மாஸ்டர் பிளானை வெளியிட்ட தந்தை!

0
1152
Babarazam

கிரிக்கெட்டில் டி20வடிவம் அறிமுகமானதில் இருந்து கிரிக்கெட் பரவுகின்ற வேகம் ராக்கெட் வேகத்தில் இருக்கிறது. மேலும் இந்திய கிரிக்கெட் வாரியம் 16 ஆண்டுகளாக வணிக ரீதியாக வெற்றிகரமாக ஐபிஎல் டி20 லீக்கை நடத்தி காட்ட, தற்பொழுது டி20 லீக்கை எல்லா நாடுகளும் வணிக ரீதியாக நடத்த ஆரம்பித்து இருக்கின்றன!

சமீபத்தில் கிரிக்கெட்டை பலகாலமாக விலக்கி வைத்திருந்த அமெரிக்கா அணியை உருவாக்க முனைப்பு காட்டியதோடு இல்லாமல், சொந்தமாக தமது நாட்டில் ஆறு அணிகளை வைத்து மேஜர் லீக் கிரிக்கெட் என்ற பெயரில் டி20 லீக்கை முதல்முறையாக நடத்தி முடித்திருக்கிறது.

- Advertisement -

அதேபோல் தற்பொழுது கனடா நாடும் கனடா குளோபல் டி20 லீக் என்ற பெயரில்ஒரு தொடரை நடத்தி வருகிறது. இந்தத் தொடர் மொத்தம் 16 நாட்கள் மட்டுமே நடக்கிறது. மேலும் ஆசிய கண்டத்தில் இந்தியா தவிர்த்து மற்ற நாடுகளில் டி20 லீக் விளையாடுவதற்கு கிடைக்கும் பணத்தைவிட அதிக பணம் கிடைக்கும். மேலும் அங்கு வெப்பமான சூழ்நிலையும் கிடையாது.

இந்த கனடா குளோபல் டி20 லீக்கில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசமுக்கு விளையாடுவதற்கு வாய்ப்புகள் வந்த பொழுதும் அவர் அதை தவிர்த்து விட்டு, 25 நாட்கள் நடக்கும் லங்கா பிரீமியர் டி20 லீக்கில் குறைந்த பணத்திற்கு வெப்பமான சூழ்நிலையில் விளையாடுகிறார்.

ஐபிஎல் போன்ற பெரிய தொடரில் பங்கேற்று விளையாடி பெரிய அளவில் சம்பாதிக்க முடியாத பாகிஸ்தான் வீரர் ஏன் இப்படி குறைந்த பணத்திற்கு வந்து இலங்கையில் விளையாட வேண்டும்? என்ற கேள்வி பரவலாகவே இருந்து வந்தது. தற்பொழுது இதற்கு பாபர் ஆஸம் தந்தை சித்திக் விளக்கம் அளித்திருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறும் பொழுது
” இலங்கை டி20 லீக்கை ஒப்பிடும் பொழுது கனடா லீக் 16 நாட்கள் மட்டுமே நடக்கிறது. மேலும் அங்கு வெப்பமும் குறைவு. ஆனால் பாபர் குறைந்த சம்பளத்திற்கு 25 நாட்கள் வெப்பமான தட்பவெப்ப நிலையில் இலங்கை லீக்கில் விளையாட சம்மதித்திருக்கிறார். கடைசியாக இப்பொழுது இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது வெப்பம் தாங்காமல் அவர் இடையில் ஓய்வு எடுத்தது கூட பார்த்தோம்.

அவர் ஏன் இப்படியான முடிவுக்கு வந்திருக்கிறார் என்றால், அடுத்து ஆசிய கோப்பை இலங்கையிலும் நடக்க இருக்கிறது, மேலும் இந்தியாவிலும் இதே போல உலக கோப்பையில் தட்பவெப்ப சூழ்நிலை நிலவும். எனவே இதற்குப் பழகிக் கொள்வதற்காகவே இரண்டு பெரிய கோப்பைகளை பாகிஸ்தானுக்காக மனதில் வைத்தே பாபர் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார். நாம் எது செய்தாலும் அது பாகிஸ்தானின் நன்மைக்காகவே இருக்க வேண்டும்!” என்று கூறியிருக்கிறார்!