இந்திய வீரராக ஏழாவது விக்கட்டுக்கு லார்ட் சர்துல் தாகூர் அசத்தல் சாதனை!

0
433
Shardul

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே 16 வது ஐபிஎல் சீசனின் ஒன்பதாவது போட்டியில் சுவாரசியமாக பரபரப்பாக நடந்து வருகிறது!

இந்தப் போட்டியில் முதலில் டாசை இழந்து பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 11.3 ஓவருக்கு ஐந்து விக்கட்டுகளை 89 ரன்களுக்கு இழந்து நெருக்கடியில் சிக்கிக்கொண்டது.

- Advertisement -

இந்த நிலையில் ஏழாவது விக்கட்டுக்கு ரிங்கு சிங் உடன் சர்துல் தாக்கூர் ஜோடி சேர்ந்தார். கைவசம் விக்கட்டுகள் இல்லாத போதும் சர்துல் தைரியமாக பெங்களூரு பந்துவீச்சை தாக்கி விளையாட ஆரம்பித்தார்.

சிறப்பாக விளையாடிய அவர் தனது முதல் ஐபிஎல் அரை சதத்தை 20 பந்துகளில் ஆறு பவுண்டரி மூன்று சிக்ஸர்கள் உடன் எடுத்தார். மேற்கொண்டு தொடர்ந்து விளையாடிய அவர் 29 பந்துகளில் ஒன்பது பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் 68 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இவர் ரிங்கு சிங் உடன் ஏழாவது விக்கட்டுக்கு 103 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா அணி ஏழு விக்கெட்டுகளுக்கு 204 ரன்கள் குவித்து அசத்தியது.

இந்தப் போட்டியில் ஏழாவது விக்கட்டுக்கு ஒரு இந்திய வீரராக சர்துல் தாகூர் அபாரமான ஒரு சாதனையை செய்திருக்கிறார். பேட்டிங் வரிசையில் 11 இடங்களிலும் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்களில் ஏழாவது இடத்துக்கு சர்துல் தாக்கூர் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரராக மாறி இருக்கிறார்.

- Advertisement -

பேட்டிங் வரிசையில் ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு இடத்திலும் அதிக ரன் அடித்த இந்திய வீரர்கள்:

  1. கே.எல்.ராகுல் 132* ரன்கள்
  2. சேவாக் 119 ரன்கள்
  3. சாம்சன் 119 ரன்கள்
  4. ரிஷப் பண்ட் 128* ரன்கள்
  5. யூசுப் பதான் 100 ரன்கள்
  6. ஹர்திக் பாண்டியா 91 ரன்கள்
  7. சர்துல் தாகூர் 68 ரன்கள்
  8. ஹர்பஜன் சிங் 64 ரன்கள்
  9. ஹர்பஜன் சிங் 49* ரன்கள்
  10. குல்கர்னி 28* ரன்கள்
  11. முனாப் பட்டேல் 23* ரன்கள்
  12. தற்பொழுது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 11.3 அவர்களுக்கு ஆறு விக்கட்டுகளை இழந்து தத்தளித்துக் கொண்டிருக்கிறது. மிகச் சரியாக இதே ஓவரின் போது ஐந்து விக்கெட்டுகளை 89 ரன்களுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இழந்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது!