உங்கள் அனைவரையும் கிரிக்கெட் களத்தில் சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன்! – அறுவை சிகிச்சைக்குப் பின் ரிஷப் பண்ட் உருக்கமான ட்ரீட் !

0
411

இந்திய அணியின் இளம் விக்கெட்கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் . இவர் சில வாரங்களுக்கு முன்பு நடந்த கார் விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார் .

உத்ராகண்ட் மாநிலத்தில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரிஷப் பண்ட் மேல் சிகிச்சைக்காக மும்பையில் உள்ள கோகிலா பெண் திருபாய் அம்பானி மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலம் மாற்றப்பட்டார் .

அங்கு அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மூட்டு தசைக்கான முதல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது . அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து ரிஷப் பண்ட் மிகவும் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகமும் பிசிசிஐ யும் தெரிவித்திருந்தது இந்த மருத்துவமனையிலேயே தங்கி தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார் .

அவருடைய காயத்தின் தீவிரத் தன்மை காரணமாக அவர் ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடங்கள் வரை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காமல் போகலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது . இதனால் ஐபிஎல் மற்றும் உலக கோப்பையில் ரிஷப் பண்ட் விளையாடுவது சந்தேகமாக இருந்தது .

இந்நிலையில் அவருக்கு மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது . அந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்ததை அடுத்து ரிஷப் பண்ட் தனது ட்விட்டரின் மூலம் தனது தனது அன்பை பகிர்ந்திருக்கிறார் .

இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள ரிஷப் பண்ட் ” தங்களின் ஆதரவுக்கும் நல்வாழ்த்துக்கள் எனது பணிவான நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் . எனது அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்ததை தங்களிடம் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் . எனக்கான புதிய பாதை தொடங்கிவிட்டது. எதிர்வரும் சவால்களை சந்திப்பதற்கு தயாராக இருக்கிறேன். இந்தத் தருணத்தில் எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் மிகவும் உறுதுணையாக இருந்த பிசிசிஐ மற்றும் திரு ஜெய்ஷா ஆகியோருக்கு எனது பணிவான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

மேலும் பதிவிட்டுள்ள அவர் ” இந்த கடினமான நேரத்தில் என்னுடன் இருந்து எனக்கு அன்பான வார்த்தைகளை கூறி என்னை ஊக்குவித்த எனது ரசிகர்கள் என்னுடன் விளையாடிய கிரிக்கெட் வீரர்கள் மருத்துவர்கள் பிசியோதெரபிஸ்டுகள் மற்றும் அனைவருக்கும் எனது மனதின் ஆழத்திலிருந்து நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் உங்கள் அனைவரையும் கிரிக்கெட் களத்தில் சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன்” என்று பதிவிட்டு இருக்கிறார் ரிஷப் பண்ட் .,

மேலும் பதிவிட்டுள்ள பண்ட் “என்னால் எனக்காக பிரார்த்தித்த எல்லாருக்கும் நேரில் சென்று நன்றி சொல்ல முடியவில்லை என்றாலும் நான் விபத்தில் சிக்கி இருந்த போது ஹீரோவாக வந்து என்னை காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த ரஜத் குமார் மற்றும் நிஷு குமார் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றி”என அவரை விபத்தில் இருந்து காப்பாற்றிய ஹரியானா போக்குவரத்து கழகத்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு தன்னுடைய நன்றியை தெரிவித்து இருக்கிறார் பண்ட் .

ரிஷப் பண்டிடமிருந்து வந்துள்ள இந்த ட்விட்டானது கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தந்துள்ளது . கடுமையான காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள பண்ட் வெகு விரைவிலேயே கிரிக்கெட் களத்தில் காண ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்