“வேணும்னா பாருங்க.. இந்த பேட்ஸ்மேன் உ.கோ இந்திய அணியில் இருக்க மாட்டார்!” – ஆசிய கோப்பை வீரர் பற்றி கம்பீர் பேச்சு!

0
1509
Gambhir

இந்திய அணி இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு தற்பொழுது மிகச் சிறந்த தயாரிப்பில் இருப்பதாக தெரிகிறது.

நேற்று இலங்கையில் நடந்து முடிந்த ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரை இந்திய அணி அபாரமான முறையில் கைப்பற்றி இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை பெரிய மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. ஏனென்றால் சிறப்பான முறையில் வெற்றி பெற்று இருக்கிறது!

- Advertisement -

இந்திய அணி ஆசியக் கோப்பைக்கு வருவதற்கு முன்னால் முக்கிய வீரர்களின் காயம் மிகப்பெரிய பிரச்சினையாக விளங்கியது. இதன் காரணமாக யார்? எந்த எந்த இடங்களில் விளையாடுவார்கள் என்பது குறித்து நிறைய சந்தேகங்கள் இருந்தது.

தற்பொழுது இந்திய அணியின் பிளேயிங் லெவனில் யார் விளையாடுவார்கள் என்பது மிகத் தெளிவாகத் தெரிந்து இருக்கிறது. மேலும் விளையாடக்கூடிய வீரர்கள் அனைவரும் சிறப்பாக இருக்கிறார்கள். இதன் காரணமாக இந்திய அணியின் தைரியம் அதிகரித்து இருக்கிறது.

ஆனாலும் கூட இந்திய அணிக்கு தற்பொழுது பதில் கிடைக்காத கேள்வியாக ஸ்ரேயாஸ் ஐயர் உடல் தகுதி இருக்கிறது. காயத்திலிருந்து மீண்டு வந்த அவர் அணியில் இடம் பெற்று, மீண்டும் காயம் அடைந்து ஆனால் அணிக்குள்ளே தொடர்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து பேசி உள்ள கம்பீர் கூறும் பொழுது “இது கவலையான விஷயம். நீண்ட நாட்களாக அணியில் இல்லாமல், ஆசியக் கோப்பைக்கு திரும்பி, ஒரு போட்டியில் மட்டும் விளையாடி, மீண்டும் காயம் அடைந்து உடல் தகுதியை இழந்திருக்கிறார்.

இந்திய அணி நிர்வாகம் இவ்வளவு பெரிய தொடருக்கு அவரை உடல் தகுதி இல்லாமல் கூட்டிச் செல்லும் என்று நான் நினைக்கவில்லை. வரும் நாட்களில் ஸ்ரேயாஸ் உலகக் கோப்பை அணியில் இருக்க மாட்டார் என்பதையும், அவருக்கு பதிலாக வேறு யாராவது வருவார்கள் என்பதையும் நீங்கள் பார்க்கலாம்.

நீங்கள் எப்பொழுதும் நல்ல உடல் தகுதியுடன் இருக்கக்கூடிய வீரர்களைக் கொண்டுதான் உலகக்கோப்பைக்கு செல்ல வேண்டும். வீரர்களின் செயல் திறன் என்பது வேறு, உடல் தகுதி என்பது வேறு.

இதுகுறித்து ஏதாவது கேள்வி எழுப்ப வேண்டும் என்றால் தேசிய கிரிக்கெட் அகாடமி இடம்தான் கேள்வி எழுப்ப வேண்டும். அவர் இத்தனை மாதங்கள் அங்கேயேதான் இருந்தார். அவர்கள் இவர் விளையாட அனுமதியும் தந்தார்கள். ஒருவேளை சீக்கிரமாகவே அவரை அங்கிருந்து அனுப்பி விட்டார்கள் என்று நினைக்கிறேன்!” என்று கூறியிருக்கிறார்!