“உங்களுக்கு இருக்கும் பிரச்சனையை முதல்ல பாருங்க” – பொங்கி எழுந்த வாசிம் அக்ரம் கம்பீர்!

0
858
Gambhir

இந்திய அணி நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு யாரும் எதிர்பாராத வகையில் இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்தது.

இந்த தோல்வி இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என மிகவும் காயப்படுத்தி இருக்கிறது. இந்த தோல்வியில் இருந்து மொத்தமாக இந்திய தரப்பு மீண்டு வருவதற்கு இன்னும் சில நாட்கள் ஆகும்.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணியின் தோல்வியை அருகில் இருக்கக்கூடிய இலங்கை மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த சில மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறார்கள்.

குறிப்பாக பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த முன்னாள் வீரர் அப்துல் ரசாக் இந்திய அணி தோற்றதுதான் சரி, வென்று இருந்தால்தான் அது மோசமானதாக இருக்கும், இறுதிப் போட்டிக்கு அப்படியான ஆடுகளத்தை அமைத்ததற்கு இது தண்டனை என்பதாக கூறியிருந்தார். மேலும் சில பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் இதற்கு முன்பாகவே இந்தியாவின் தோல்வி குறித்து பேசினார்கள்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வாசிம் அக்ரம் கூறும் பொழுது “இந்தியாவும் பாகிஸ்தானும் ஒருவருக்கொருவர் தோல்வியடையும் பொழுது அதை கொண்டாடிக் கொள்வதை பார்க்க நன்றாகவே இல்லை. குறைந்தபட்சம் விளையாட்டு இல்லாத இதை செய்யாமல் இருக்கலாம்.

- Advertisement -

நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. ஆனால் இரு நாடுகளிலும் இப்படியான வேலைகளை செய்யக்கூடிய சில பிரபலமான பெயர்கள் இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் அவருடைய நாட்டின் மீதான தேசபக்தி இருக்கிறது. அதை அந்த நாட்டோடு அவரவர் வைத்துக் கொள்ள வேண்டும். எல்லோரும் கஷ்டப்படும் நேரத்தில் அதைக் கொண்டாடக்கூடாது. கடைசியில் இது வெறும் விளையாட்டு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்!” என்று கூறி இருக்கிறார்!

இதுகுறித்து கம்பீர் கூறும் பொழுது “மற்ற அணிகளின் தோல்வியை கொண்டாடுவதை விட உங்கள் அணியின் வெற்றிகளை கொண்டாடுங்கள். மற்ற அணிகளின் தோல்வியை கொண்டாடுவதில் அர்த்தமே கிடையாது.

பாகிஸ்தான் தோற்கும் பொழுது இந்தியாவில் சிலர் மகிழ்ச்சி அடைகிறார்கள். இந்தியா தோற்கும்பொழுது பாகிஸ்தானிலும் இதேதான் நடக்கிறது. இது மிகவும் எதிர்மறையான அணுகுமுறை. குறைந்தபட்சம் விளையாட்டிலாவது இதை மாற்ற வேண்டும். அவரவர் அணிகளில் பிரச்சனைகளும் சவால்களும் நிறைய இருக்கிறது. முதலில் அதைத்தான் ஒருவர் பார்க்க வேண்டும்!” என்று கூறி இருக்கிறார்!