இந்தியாவுக்கு இப்போ புரிஞ்சிருக்கும், பவுலிங்க விட எங்களோட பேட்டிங் எப்படின்னு – தென்னாபிரிக்கா கேப்டன் பேட்டி!

0
4971

தென் ஆப்பிரிக்கா அணியின் பேட்டிங் தற்போது எப்படி இருக்கிறது என்று பலரும் அறிந்திருப்பர் என தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் தென் ஆப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா.

டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் இந்தியா மற்றும் – தென் ஆப்பிரிக்கா மோதிய போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

- Advertisement -

வழக்கம் போல இந்திய அணிக்கு கேஎல் ராகுல்(9) மற்றும ரோகித் சர்மா(15) இருவரும் நல்ல துவக்கம் அமைத்துக் கொடுக்கவில்லை. இம்முறை விராட் கோலியும்(12) சொற்பரன்களுக்கு ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித்தார்.

சூரியகுமார் யாதவ் மட்டுமே வேறு ஏதோ ஒரு மைதானத்தில் விளையாடுவது போல விளையாடிக் கொண்டிருந்தார். அவர் 40 பந்துகளில் 68 ரன்கள் அடித்தார். இதில் மூன்று சிக்ஸர் மற்றும் 6 பவுண்டரிகள் அடங்கும். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களுக்கு ஆட்டம் இழந்தனர். தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவை 133 ரன்களுக்குள் சுருட்டியது.

அடுத்ததாக இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்கா அணிக்கும் மிக சிறப்பான துவக்கம் கிடைக்கவில்லை. அர்ஷதீப் சிங் ஒரே ஊரில் டீ காக் மற்றும் ரூஸோவ் இருவரின் விக்கெட்டையும் வீழ்த்தினார்.

- Advertisement -

மெதுவாக ஆட்டம் இந்திய அணியின் பக்கம் இருந்தது. பத்து ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 40 ரன்கள் மட்டுமே தென் ஆப்பிரிக்கா அணி எடுத்திருந்தது. அதற்கு அடுத்த ஓவரிலிருந்து ஆட்டத்தின் கியரை மாற்றி ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

மார்க்ரம் மற்றும் மில்லர் இருவரும் களத்தில் நின்று இந்திய அணியின் பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தனர். மார்க்ரம் அடுத்தடுத்து விக்கெட் வாய்ப்பை கொடுத்தார். ஆனால் இந்திய வீரர்கள் அதை பயன்படுத்திக் கொள்ளவில்லை. 41 பந்துகளில் 52 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார்

இறுதிவரை களத்தில் நின்ற மில்லர் 56 ரன்கள் அடித்து தென் ஆப்பிரிக்கா அணியின் வெற்றியை உறுதி செய்தார். இருபதாவது ஓவரில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

போட்டி முடிந்த பிறகு பேட்டியளித்த தென்னாபிரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா கூறுகையில், “எங்களுக்கு இப்படி ஒரு பிளான் இருந்தது. பத்து ஓவர்கள் ஆகிவிட்டது இனி அடிக்க துவங்குவோம் என்று களத்தில் இருந்த வீரர்களிடம் பேசினேன். அதிர்ஷ்டவசமாக ஆட்டம் எங்கள் வசம் இருந்ததால் நாங்கள் விளையாடிய விதம் எங்களுக்கு சாதகமாக அமைந்தது.

போட்டிக்கு முன்பே தெரியும் எங்களது பேட்டிங் எந்த அளவிற்கு சிறப்பாக இருக்கிறது என்று. இந்தியாவை விட நாங்கள் நன்றாக பேட்டிங் லைன்-அப் வைத்திருக்கிறோம் என உணர்கிறேன்.

இதற்கு முன்னர் பெர்த் மைதானத்தில் நடந்த போட்டிகளில் நன்கு கவனித்தோம். பவுன்ஸ் மற்றும் அதற்கு பீல்டிங் எப்படி இருந்தால் சரியாக இருக்கும் என பல முறை ஒத்திகை பார்த்தோம். அது எங்களுக்கு சாதகமாக அமைந்தது.

உலககோப்பை வெல்லும் அணிகளில் ஒன்றாக எங்களை பார்க்காத வரை சிறப்பானது தான். அது எங்களுக்கு தேவையும் இல்லை. அதை வைத்துக்கொண்டு கூடுதல் அழுத்தத்துடன் எங்கள் வீரர்கள் விளையாடுவதை நான் விரும்பவில்லை. அன்றைய போட்டியில் என்ன தேவையோ அதை கொடுக்க விரும்புகிறோம்.” என்றார்.