ஆஸி டெஸ்ட் முக்கியம்.. விராட் மற்றும் ரோஹித்காக நாம இதை செஞ்சே ஆகணும் – இந்திய அணியின் துணை கோச் பேட்டி

0
196

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பிறகு நவம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபியில் விளையாட உள்ளது. இந்தத் தொடர் இந்திய அணிக்கு மிக முக்கியமான ஒன்றாகும்.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் துணை பயிற்சியாளர் அபிஷேக் நாயர் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா குறித்து சில முக்கிய கருத்துகளை கூறி இருக்கிறார்.

- Advertisement -

இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில், மூத்த கிரிக்கெட் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரின் பேட்டிங் ஃபார்ம் இந்திய அணிக்கு பிரச்சனையை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸ் தவிர விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் மிகக் குறைந்த ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறி இருக்கின்றனர்.

இது இந்திய அணி தொடரை இழப்பதற்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. மேலும் இதற்குப் பிறகு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் இருப்பதால் இந்திய அணியின் பேட்டிங் ஃபார்ம் தற்போது சிக்கலை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் துணை பயிற்சியாளர் அபிஷேக் நாயர் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு அவர்களுக்கான இடத்தை கொடுத்து பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம் என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் அணுகுமுறை பெரியது. அவர்கள் கடினமான சூழ்நிலைகளில் போராடுகிறார்கள் என்று உணர்கிறேன். இதனால் சில நேரங்களில் பொறுமையாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். சிறந்த வீரர்களுக்கு கூட கடினமான நேரங்கள் வரலாம். விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா மட்டுமல்லாமல் அனைத்து வீரர்களையும் அதிகமாக பாராட்ட வேண்டும் என்று நினைக்கிறேன்.

இதையும் படிங்க:1 பந்து 10 ரன்.. வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட்.. வினோத நிகழ்வை நிகழ்த்திய தென்னாப்பிரிக்கா

எனவே இந்த இரண்டு வீரர்கள் விஷயத்தில் பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம்” என்று கூறி இருக்கிறார். விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவருக்கும் போதுமான அவகாசத்தை வழங்கினால் அவர்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று அபிஷேக் நாயர் கூறியிருக்கிறார். எனவே ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான திட்டத்தில் இவர்கள் இருவரும் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -