டி20 யில் குறைந்த பந்தில் அரை சதம் லிட்டன் தாஸ் சாதனை ; அயர்லாந்தை ஊதித்தள்ளியது பங்களாதேஷ்!

0
3580
Ban vs Ire

அயர்லாந்து அணி இந்த மாதம் பங்களாதேஷ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், ஒரே ஒரு போட்டி மட்டும் கொண்ட டெஸ்ட் தொடர் என மூன்று வடிவ தொடர்களில் விளையாடுகிறது.

அயர்லாந்தின் இந்தச் சுற்றுப்பயணத்தில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை இரண்டுக்கு பூஜ்ஜியம் என பங்களாதேஷ் அணி கைப்பற்றியது. இதற்கு அடுத்து தற்பொழுது மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது.

- Advertisement -

இந்தத் தொடரின் முதல் போட்டியில் டக்வோர்த் லீவிஸ் விதிப்படி பங்களாதேஷ் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரில் முன்னிலை வகித்தது. இன்று தொடரின் இரண்டாவது போட்டி நடைபெற்று முடிந்திருக்கிறது. இந்த போட்டியில் பங்களாதேஷ் அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த தொடரையும் கைப்பற்றி இருக்கிறது.

17 ஓவராக குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணி தொடக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ் தந்த அதிரடியான ஆட்டத்தால் மூன்று விக்கெட்டுகளுக்கு 22 ரன்கள் எடுத்தது. மிகச் சிறப்பாக விளையாடிய லிட்டன் தாஸ் 18 பந்துகளில் அரைசதம் அடித்து, டி20 கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் அரை சதம் அடித்த பங்களாதேஷ் வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இதற்கு முன்பு 2007 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தனது முதல் டி20 போட்டியில் பங்களாதேஷ் அணி விளையாடிய பொழுது, அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் முகமது அஷ்ரபில் 20 பந்துகளில் அதிரடியான அரைசதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியில் லிட்டன் தாஸ் 10 பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் 41 பந்துகளில் 83 ரன்கள் குவித்தார். தோனி டலுக்கர் 23 பந்துகளில் 44 ரன்கள் குவித்தார். கேப்டன் சகிப் அல் ஹசன் 38 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

இதைத் தொடர்ந்து விளையாடிய அயர்லாந்து அணி 17 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுக்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. அயர்லாந்து அணியில் கேம்பர் மட்டும் 30 பந்துகளில் மூன்று சிக்சர் 3 பவுண்டரி உடன் 50 ரன்கள் எடுத்தார். பங்களாதேஷ் தரப்பில் கேப்டன் ஷகிப் அல் அசன் நான்கு ஓவர்கள் பந்து வீசி 22 ரன்கள் விட்டுத்தந்து ஐந்து விக்கட்டுகளை வீழ்த்தினார். இவரே ஆட்டநாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்!