சொன்னா கேளுங்க.. அந்த பிளேயர் மட்டும் உலக கோப்பைக்கு வேணாம் – உறுதியாக மறுக்கும் ரவி சாஸ்திரி!

0
676
Ravishastri

இந்தியாவில் அக்டோபர் ஐந்தாம் தேதி துவங்கி நவம்பர் 19ஆம் தேதி வரையில் நடைபெற இருக்கின்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு இந்திய அணி தயாராவதற்கு, அக்டோபர் 30ஆம் தேதி துவங்கி ஒரு நாள் கிரிக்கெட் வடிவத்தில் நடைபெற இருக்கும் ஆசியக் கோப்பை தொடர் மிக முக்கியமான தொடராக பார்க்கப்படுகிறது!

காரணம், இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு மிகவும் முக்கியமான வீரர்களான பும்ரா, ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் காயம் அடைந்திருந்தது மிகப்பெரிய பின்னடைவாக இருக்கிறது.

- Advertisement -

இதில் தற்பொழுது பும்ரா மற்றும் பிரசித் கிருஷ்ணா இருவரும் அயர்லாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கு உடல் தகுதி பெற்று அயர்லாந்து சென்றிருக்கிறார்கள். இதில் பும்ரா கேப்டனாகவே சென்று இருக்கிறார்.

ஆனால் உலகக் கோப்பைக்கான இந்திய அணியை வடிவமைப்பதில் கேஎல்.ராகுல் மற்றும் ஸ்ரேயா இருவரது உடல் தகுதி எவ்வாறு இருக்கிறது என்பது தெரிய வேண்டியதாக இருக்கிறது. ஒருவேளை இவர்கள் உடல் தகுதி பெற்று ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடித்தாலும், இவர்களால் உடனே ஃபார்முக்கு வந்து உலகக் கோப்பை இந்திய அணியில் இடம்பெற முடியுமா? என்கின்ற சந்தேகம் நிலவுகிறது.

இதுகுறித்து மிகக் குறிப்பாக கே.எல்.ராகுல் குறித்து இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் கேட்ட பொழுது “சில காலம் விளையாடாமல் இருந்து மற்றும் காயத்தில் இருந்து மீண்டும் வரும் ஒரு வீரரை பற்றி நீங்கள் பேசும் பொழுது, அவரை நீங்கள் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் எதிர்பார்க்கும் பொழுது, நீங்கள் அந்த வீரரிடம் கொஞ்சம் அதிகம் கேட்கிறீர்கள் என்று அர்த்தம்.

- Advertisement -

ஒரு வீரர் விளையாடாமல் இருந்து காயத்தில் மீண்டு வந்து உடனே விளையாடுவது என்பது மிகவும் கடினமான விஷயம். இப்படி இருந்து வரும் பொழுது அசைவின் வீச்சு மற்றும் அவர் இயக்கங்கள் ஆகியவற்றை வைத்து பார்த்தால் கடினமானதாக இருக்கும். எனவே அவருக்கு என் அளவில் இடம் கிடையாது என்பதே உண்மை!” என்று வெளிப்படையாக கூறி இருக்கிறார்!

இதேபோல் கே.எல்.ராகுல் மற்றும் ஸ்ரேயாஷ் ஐயர் விஷயத்தில் பேசியுள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் டேனிஷ் கனேரியா
“இருவரும் காயம் குணமடைந்து தற்பொழுது இந்திய தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார்கள். அவர்கள் வர இருக்கும் பெரிய தொடர்களுக்கு இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இருந்தாலும் கூட பயிற்சி அடிப்படையில் ஒருவரை அணிக்குள் கொண்டு வரக்கூடாது. அவர்கள் போட்டிகளில் விளையாட வேண்டும். அவர்கள் நல்ல பார்ம் காட்டினால் மட்டுமே அணியில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்!” என்று கூறியிருக்கிறார்!