“வருஷ கடைசியில கேளுங்க.. இனி டெஸ்ட் கிரிக்கெட்ல வேற மாதிரி என்னை பார்ப்பிங்க?” – கில் அதிரடி சவால்

0
74
Gill

கடந்த ஆண்டில் மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுவதற்கு இந்திய அணி வெஸ்ட் இண்டிஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்தது. இந்த தொடரில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி இரண்டு முக்கியமான மாற்றங்களை சந்தித்தது.

துவக்க இடத்திற்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் நீண்ட நாட்கள் கழித்து ஜெய்ஸ்வால் இடது கை வீரராக உள்ளே அறிமுகப்படுத்தப்பட்டார். ஏற்கனவே துவக்க இடத்தில் விளையாடி வந்த சுக்மண்கில் மூன்றாவது இடத்திற்கு தானே கேட்டு கீழே வந்து விளையாடினார்.

- Advertisement -

இதுவரையில் மூன்றாவது இடத்தில் மொத்தம் நான்கு டெஸ்ட் போட்டிகளை சந்தித்திருக்கும் சுப்மன் கில்லுக்கு பெரிய வெற்றிகள் எதுவும் வரவில்லை என்பதோடு, சுமாரான செயல்பாடும் இல்லாமல் இருக்கிறது.

வெளியில் நிறைய வீரர்கள் காத்துக் கொண்டிருக்கும் பொழுது, மேற்கொண்டு நடப்பு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் அவருக்கு சரியாக அமையாவிட்டால், அடுத்து அவருடைய இடத்தில் வேறு எந்த வீரராவது விளையாடினால் ஆச்சரியப்படுவதற்கு இருக்காது.

இப்படியான சூழ்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருடைய மூன்றாவது இடம் மற்றும் அவருடைய டெஸ்ட் கிரிக்கெட் எதிர்கால திட்டம் பற்றி கேள்விகள் அவரிடம் முன்வைக்கப்பட்டது. இதற்கு அவர் சவால் அளிக்கும் விதமாக பதில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து சுப்மன் கில் கூறும் பொழுது “நீங்கள் துவக்க வீரராக இருக்கும் பொழுது எடுத்தவுடன் உள்ளே சென்று விளையாட வேண்டியது இருக்கும். ஆனால் நீங்கள் மூன்றாவது வீரராக களம் இறங்கும் பொழுது வெளியில் இருந்து அமைதியாக அங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று உங்களால் மதிப்பிட முடியும்.

எனக்கு மூன்றாவது இடத்தில் களம் இறங்கிய சில போட்டிகளில் இந்த அனுபவம் கிடைத்தது. சில போட்டிகளில் சமீபத்தில் ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா இருவரும் நீண்ட நேரம் பேட்டிங் செய்தார்கள். நான் வெளியில் அமர்ந்து 50 முதல் 60 ஓவர்கள் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று பொறுமையாக பார்த்துக் கொண்டிருந்தேன்.

இதையும் படிங்க : அஸ்வின் ஜடேஜா தனித்துவ சாதனை.. கும்ப்ளே ஹர்பஜன் கோல்டன் ரெக்கார்ட் முறியடிப்பு.. அசத்தும் ஜோடி

நாங்கள் இந்திய நிலைமைகளில் விளையாடுவதற்கு பழக்கப்பட்டு விட்டோம். நீங்கள் உங்கள் டிஃபன்ஸை நம்பி ரன்களுக்காக விளையாட வேண்டும். கடந்த ஆண்டு எனக்கு வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் திருப்புமுனை ஆண்டாக அமைந்தது. சிவப்பு பந்தில் இந்த ஆண்டு எனக்கு அப்படியானதாக அமையும். நீங்கள் இதே கேள்வியை இந்த ஆண்டு இறுதிக்குள் கேட்டால் என்பதில் இதே வழியில் அமையும்” எனக் கூறியிருக்கிறார்.