55 ரன்னில் சுருண்ட தெ.ஆ.. டெஸ்டில் மிக குறைந்த ரன்னில் ஆல் அவுட்டான டீம் எது தெரியுமா.. வரலாற்று புள்ளி விவரம்

0
549

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 55 ரன்களில் ஆட்டம் இழந்து படுதோல்வியை தழுவி இருக்கிறது. இதன் மூலம் 125 ஆண்டு கால வரலாற்றில் தென்னப்பிரிக்கா அணி தங்களது சொந்த மண் இவ்வளவு குறைந்த ஸ்கோரில் ஆட்டம் இழந்தது கிடையாது.

இதற்கு காரணம் இந்திய அணியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளரான முகம்மது சிராஜ் 15 ரன்களை விட்டுக் கொடுத்து ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.இந்த நிலையில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை அடிக்கப்பட்ட குறைந்தபட்ச அணியின் ஸ்கோர் எது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

- Advertisement -

1955 ஆம் ஆண்டு இங்கிலாந்து எதிராக நியூசிலாந்து அணி 26 ரன்களில் ஆட்டம் இழந்தது. இதே போன்று இங்கிலாந்துக்கு எதிராக தென்னாப்பிரிக்கா அணி 30 ரன்களில், 1986 ஆம் ஆண்டு ஆட்டமிழந்தது. 1924 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 30 ரன்களில் சுருண்டது.

இதே போன்று 1899 கேப்டவுனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக தென்னாப்பிரிக்கா 35 ரன்களிலும் 1932 ஆம் ஆண்டு மெல்போர்னில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 36 ரன்களிலும் சுருண்டது.

அதேபோன்று 1902 ஆம் ஆண்டு பிரமிங்காமல் நடைபெற்ற டெஸ்டில் இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா 36 ரன்களின் ஆல் அவுட் ஆனது. 2020 ஆம் ஆண்டு அடிலெய்டில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்டில் இந்தியா 36 ரன்களில் சுருண்டது.

- Advertisement -

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்தபட்ச 10 அணியின் ஸ்கோர் பட்டியலில் தென்னாப்பிரிக்கா அணி நான்கு முறையும், இந்திய அணி இரண்டு முறையும், ஆஸ்திரேலியா அணி இரண்டு முறையும், நியூசிலாந்து அணி ஒரு முறையும் இருக்கிறது. இன்றைய ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணி 55 ரன்களில் ஆட்டமிழந்தது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அடிக்கப்பட்ட 36-வது குறைந்தபட்ச ஸ்கோராகும்.

இதே கேப்டவுன் ஆடுகளத்தில் 55 ரன்கள் தென்னாப்பிரிக்கா ஆட்டமிழந்திருப்பது நான்காவது குறைந்த பட்ச ஸ்கோர் ஆகும். இதேபோன்று இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அடிக்கப்பட்ட குறைந்தபட்ச ஸ்கோராக தென்னாப்பிரிக்காவின் 55 ரன்கள் என்ற இந்த ஆட்டம் பார்க்கப்படுகிறது.