ஆசியாவில் அதிக சம்பளம் வரும் பிளேயர்ஸ் லிஸ்ட்.. 2வது இடத்தில் கோலி.. அப்போ முதலிடத்தில் யாரு?

0
2547

இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் இல் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒரு நாள் போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியை இந்தியா ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்திருக்கிறது

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இறுதி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி வருகின்ற 1ஆம் தேதி நடைபெற இருக்கிறது. நேற்றைய போட்டியில் அணியின் சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இளம் வீரர்களை கொண்ட அணி களம் இறக்கப்பட்டது.

- Advertisement -

ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளின் வரலாற்றில் குறைவான எண்ண்ஸ்களில் 13000 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை படைப்பதற்கு விராட் கோலிக்கு இன்னும் 102 ரன்கள் தேவைப்படுகிறது. இந்தத் தொடரிலேயே அந்த சாதனையை முறியடிப்பார் என்று ரசிகர்கள் ஆவலில் இருந்தனர். ஆனால் முதல் போட்டியில் அவர் பேட்டிங் ஆட வரவில்லை இரண்டாவது போட்டியில் அவருக்கு ஓய் ஒழிக்கப்பட்டது. இதனால் மூன்றாவது போட்டியில் கண்டிப்பாக விராட் கோலி விளையாடுவார் என ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர் .

தற்போது ஸ்போர்ட்ஸ் கோ என்ற நிறுவனம் உலக அளவில் அதிக வருமானம் ஈட்டும் விளையாட்டு வீரர்கள் பற்றிய டாப் 100 பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. அந்தப் பட்டியலில் ஆசியாவை சேர்ந்த இரண்டு விளையாட்டு வீரர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர் . அதில் ஒருவர் விராட் கோலி என்பது குறிப்பிடத்தக்கது . இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள இன்னொரு வீரர் ஜப்பானில் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா.

இந்தப் பட்டியல் 2022 ஆம் ஆண்டில் விளையாட்டில் அதிக வருமானம் ஈட்டிய 100 வீரர்களை கொண்டுள்ளது. இதில் ஆசிய கண்டத்தில் இருந்து விராட் கோலி மற்றும் நவோமி ஒசாகா ஆகிய இருவரும் இடம் பெற்றுள்ளனர். வெற்றி மற்றும் சம்பளத்தின் அடிப்படையில் நவோமி ஒசாகா கடந்த ஆண்டு 1.2 மில்லியன் அமெரிக்க டாலர்களை சம்பாதித்து இருக்கிறார். ஆனால் விராட் கோலி கடந்த ஆண்டில் மட்டும் சம்பளம் மற்றும் வெற்றியின் மூலமாக 2.9 மில்லியன் அமெரிக்க டாலர்களை சம்பாதித்துள்ளார் .

- Advertisement -

அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலில் விராட் கோலி 61 வது இடத்தில் இருக்கிறார் ஆனால் நவோமி ஒசாகா இருபதாவது இடத்தில் இருக்கிறார். இதன் மூலம் ஆசியாவில் விளையாட்டு துறையின் மூலம் அதிக வருமானம் ஈட்டும் வீரர்கள் பட்டியலில் நவோமி ஒசாகா முதலிடத்திலும் விராட் கோலி இரண்டாம் இடத்திலும் இருக்கின்றனர் . சம்பளம் மற்றும் வெற்றிகளின் அடிப்படையில் விராட் கோலி ஒசாகவை விட அதிக வருமானம் ஈட்டினாலும் விளம்பரங்களின் அடிப்படையில் நவோமி ஒசாகா விராட் கோலியை விட அதிக வருமானம் ஈட்டி முதல் இடத்தை பெற்றிருக்கிறார் .

கடந்த ஆண்டில் விளம்பர ஒப்பந்தங்கள் மற்றும் பிராண்ட் எண்டோஸ்மென்ட் மூலமாக நவோமி ஒசாகா 52 மில்லியன் அமெரிக்க டாலர்களை வருமானமாக ஈட்டி இருக்கிறார் . மறுபுறம் விராட் கோலி கடந்த ஆண்டில் விளம்பர ஒப்பந்தங்களின் மூலமாக 31 மில்லியன் அமெரிக்க டாலர்களை வருமானமாக பெற்றுள்ளார் .நவோமி ஒசாகா மற்றும் விராட் கோலி இருவருமே 2021 ஆம் ஆண்டு விட கடந்த ஆண்டு சிறிது பின்னடைவை சந்தித்து இருக்கின்றனர் . உலகிலேயே அதிக வருமானம் ஈட்டும் விளையாட்டு வீரர்களின் பட்டியலில் 2021 ஆண்டின் புள்ளி விவரங்களின்படி நவோமி ஒசாகா பதினைந்தாவது இடத்தில் இருந்தார் . விராட் கோலி 59-வது இடத்தில் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2022 ஆம் ஆண்டின் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் அமெரிக்காவின் என்பிஏ கூடைப்பந்து வீரரான லெப்ரோன் ஜேம்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.