அமெரிக்க மேஜர் லீக் கிரிக்கெட்டில் விளையாட இருக்கும் 9 இந்திய வீரர்கள் பட்டியல்!

0
969
MLC2023

இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் டி20 கிரிக்கெட் லீக் ஐபிஎல் போல, அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்துவதற்காக மேஜர் லீக் கிரிக்கெட் எம்.எல்.சி என்ற டி20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட இருக்கிறது.

இந்தத் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய ஐபிஎல் அணி நிர்வாகங்கள் அணிகளை வாங்கி உள்ளன. இந்தத் தொடரில் 9 இந்திய வீரர்கள் விளையாட இருக்கிறார்கள் என்பது சுவாரசியமான ஒரு விஷயம். அவர்கள் யார் என்று இந்தச் சிறிய கட்டுரைத் தொகுப்பில் பார்ப்போம்.

- Advertisement -

உன்முகன்த் சந்த் :

இந்திய அண்டர் 19 வீரராக பெரிய அளவில் கவனம் ஈர்த்தவர். ஆனால் இவரது எதிர்காலம் சிறப்பாக அமையவில்லை. ஐபிஎல் தொடரில் டெல்லி, ராஜஸ்தான், மும்பை என மூன்று அணிகளுக்கு விளையாடிய இவர், தற்பொழுது அமெரிக்காவுக்கு விளையாட இருக்கிறார். இந்தத் தொடரில் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிக்கு விளையாடுகிறார்.

ஹர்மித் சிங் :

- Advertisement -

இடது கை சுழற் பந்துவீச்சு ஆல்ரவுண்டரான இவர் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கும், உள்நாட்டு கிரிக்கெட்டில் திரிபுரா மற்றும் மும்பை அணிக்கும் விளையாடி இருக்கிறார். தற்பொழுது சீட்டில் ஆர்கஸ் அணிக்கு விளையாடுகிறார்.

தஜீந்தர் சிங் :

வலது கை சுழற் பந்துவீச்சாளரான இவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் ராஜஸ்தான் அணிக்காகவும், ஐபிஎல் தொடரில் மும்பை மற்றும் பஞ்சாப் அணிக்காகவும் விளையாடியவர். இந்தத் தொடரில் சான்பிரான்சிஸ்கோ யூனிகான்ஸ் அணியால் வாங்கப்பட்டு இருக்கிறார்.

சைதன்யா பிஸ்னோய் :

டெல்லி பேட்ஸ்மேனான இவர் 2018-19ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்தவர். இந்தத் தொடரில் சான்பிரான்சிஸ்கோ யூனிகான்ஸ் அணியில் விளையாடுகிறார்.

சௌரப் நெட்ராவால்கர் :

2010ஆம் ஆண்டு அண்டர் 19 இந்திய அணியின் கேப்டனாக இருந்தவர். இவரது தலைமையின் கீழ் கேஎல்.ராகுல் மற்றும் மயன்க் அகர்வால் இருவரும் விளையாடி இருக்கிறார்கள். இந்தத் தொடரில் இவர் வாஷிங்டன் பிரீடம் அணிக்கு விளையாடுகிறார்.

சரப்ஜித் லட்டா :

லெக் பிரேக் பவுலரான இவர், டெல்லி, குஜராத் லயன்ஸ், கொல்கத்தா அணிகளுக்கு ஐபிஎல் தொடரிலும், உள்நாட்டு கிரிக்கெட்டில் பஞ்சாப் அணிக்காகவும் விளையாடி இருக்கிறார். தற்பொழுது அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்து இந்தத் தொடரில் எம்.ஐ நியூயார்க் அணியில் விளையாடுகிறார்.

ஸ்மிட் படேல் :

2012 ஆம் ஆண்டு இந்திய அணி அண்டர் 19 உலகக்கோப்பையை வென்ற பொழுது, அந்த அணியில் இடம் பெற்று இருந்தவர். இவரும் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்து, தற்பொழுது இந்தத் தொடரில் சான்பிரான்சிஸ்கோ யூனிகான்ஸ் அணியில் விளையாடுகிறார்.

மிலின்த் குமார் :

பந்துவீச்சு ஆல்ரவுண்டரான இவர் ஐபிஎல் தொடரில் டெல்லி மற்றும் பெங்களூர் அணிக்கு விளையாடி இருக்கிறார். தற்போது இந்த தொடரில் டீம் டெக்சாஸ் அணிக்கு விளையாடுகிறார்.

அம்பதி ராயுடு:

சர்வதேச அளவில் இந்திய அணிக்காகவும் ஐபிஎல் தொடரில் மும்பை மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடிய நட்சத்திர வீரரான இவர், சென்னை சூப்பர் கிங்ஸ் வாங்கியுள்ள அணிக்காக விளையாட இருக்கிறார்!