கடந்த வருடங்களைப் போல தற்போதும் பெங்களூரு அணி மூன்று வீரர்களை மட்டுமே நம்பி இல்லை – ஆர் சி பி அணியை பற்றி புட்டு வைத்த ஆகாஷ் சோப்ரா

0
70

நேற்று நடந்த எலிமினேட்டர் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகள் மோதின. போட்டியில் முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது. பெங்களூரு அணியில் அதிகபட்சமாக ராஜட் பட்டிதர் 54 பந்துகளில் 112 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பின்னர் விளையாடிய லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 193 ரன்கள் மட்டுமே குவித்தது. லக்னோ அணியில் அதிகபட்சமாக கேப்டன் கேஎல் ராகுல் 58 பந்துகளில் 79 ரன்கள் குவித்தார். 14 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி கண்டு இரண்டாவது தகுதிச்சுற்று போட்டிக்கு முன்னேறியுள்ளது. போட்டியில் தோல்வி அடைந்த லக்னோ அணி தொடரில் இருந்து வெளியேறியது.

- Advertisement -

பெங்களூரு அணி முன்பு போல மூன்று வீரர்களை மட்டும் நம்பி இல்லை

முன்பெல்லாம் பெங்களூர் அணி எப்பொழுதும் அந்த அணியின் நட்சத்திர மூன்று கிரிக்கெட் வீரர்களை நம்பியே ஒவ்வொரு போட்டியிலும் களமிறங்கும். ஆனால் நடப்பு ஐபிஎல் தொடரில் அந்த வழக்கம் மாறியுள்ளதாக கிரிக்கெட் வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா பாராட்டி இருக்கிறார்.

எலிமினேட்டர் போட்டியில் பெங்களூரு அணி கேப்டன் ஃபேப் டு பிளேசிஸ் அவுட் ஆனதும் 3வது வீரராக ராஜட் பட்டிதர் விராட் கோலியுடன் இணைந்து மிக சிறப்பாக விளையாடினார். ஒரு கட்டத்தில் விராட் கோலி அவுட் ஆகி விட பின்னர் கிளன் மேக்ஸ்வெல் 9 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். பின்னர் வந்த மஹிபால் லோம்ராரும் அவுட்டாக, தினேஷ் கார்த்திக் இறுதி நேரத்தில் ராஜட் பட்டிதருக்கு உறுதுணையாக நின்றார்.

- Advertisement -

கடைசி 5 ஓவர்களில் இவர்கள் இருவரும் இணைந்து 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதுவே போட்டியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. நேற்றைய போட்டியில் விராட் கோலி, டு பிளேசிஸ் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோரை நம்பி அணி இல்லை. இளம் வீரர் பட்டிதர் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.

இவ்வாறாக நடப்பு ஐபிஎல் தொடரில் ஃபேப் டு பிளேசிஸ் மற்றும் விராட் கோலி ஒரு சில போட்டிகளில் தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்கினார்கள். குறிப்பாக லீக் தொடரின் கடைசி ஆட்டத்தில் விராட் கோலி ஆடிய விதம் அணியை வெற்றி பெறச் செய்தது. மறுப்பக்கம் கிளென் மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி வருகிறார். தினேஷ் கார்த்திக் பினிஷராக அனைத்து போட்டியிலும் தன்னுடைய பங்கை சிறப்பாக செய்து வருகிறார்.

பந்துவீச்சாளர்கள் மத்தியில் பணிந்து ஹசரங்கா ஜோஷ் ஹேசெல்வுட் மற்றும் ஹர்ஷால் பட்டேல் ஆகியோரும் மிக சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இவ்வாறு பெங்களூர் அணியில் உள்ள அனைத்து வீரர்களும் தற்போது சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், ஐபிஎல் கோப்பையை வெல்ல அனைத்து தகுதியும் உள்ள அணியாக தெரிகிறது என்றும் ஆகாஷ் சோப்ரா பாராட்டு தெரிவித்திருக்கிறார்.