“இத வச்சு 100 கப் வாங்கலாம் போலயே!” – இந்த ரெண்டு மாசத்தில் ஐபிஎல்-ல் விராட் கோலி சம்பாதித்தது எத்தனை கோடி தெரியுமா?

0
1815
Viratkohli

இன்று விளையாட்டு உலகில் முக்கியமான வீரர்களில் கிரிக்கெட் விளையாட்டு வீரரான இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் விராட் கோலிக்கு முக்கியமான இடம் இருக்கிறது!

சர்வதேச அளவில் முப்பதாயிரத்திற்கும் அதிகமான ரன்களை குவித்து அதிக சர்வதேச ரன்கள் குவித்தவர்களில் சச்சினுக்கு அடுத்தபடியாக இருக்கிறார். இவருக்கு இந்தியா தாண்டி உலகம் முழுவதிலும் இருந்து ரசிகர்கள் இருக்கிறார்கள்.

- Advertisement -

விராட் கோலி இன்ஸ்டாகிராமில் 249 மில்லியன் பாலோயர்களையும், ட்விட்டரில் 55.8 மில்லியன் பாலோயர்களையும் கொண்டிருக்கிறார். இதன் மூலமாக இவர் ஒரு பொருளை சந்தைப்படுத்துவதில் பெரிய விளம்பர இயந்திரமாக மாறி இருக்கிறார்.

இதனால் விராட் கோலிக்கு விளம்பர ஒப்பந்தங்கள், பார்ட்னர்ஷிப்புகள் மற்றும் இந்திய கிரிக்கெட் மூலம் கிடைக்கும் வருவாய் என மிகப் பெரிய வருமானம் ஆண்டுதோறும் கிடைத்து வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணிக்கு விளையாடுவதின் மூலமும், விளம்பர ஒப்பந்தங்கள் மற்றும் பார்ட்னர்ஷிப் மூலமாகச் சேர்த்து 200 கோடிகளைத் தாண்டி சம்பாதிக்கிறார். மேலும் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக கடந்த ஆண்டு வரை மொத்தமாக விராட் கோலி 139.82 கோடி சம்பாதித்து இருந்தார்.

- Advertisement -

தற்பொழுது ஐபிஎல் நடக்கும் இந்த இரண்டு மாதத்தில் மட்டும் நாம் யாரும் யோசித்துப் பார்த்திடாத அளவுக்கு தனிப்பட்ட முறையில் விராட் கோலி மிகப்பெரிய வருவாயை ஈட்டி இருக்கிறார்.

விராட் கோலி இந்த இரண்டு மாதத்தில் பெங்களூரு அணிக்கு விளையாடுவதின் மூலம் 15 கோடியையும், தனக்கு சோசியல் மீடியாவில் இருக்கும் பலத்தின் மூலம் பொருட்களை விளம்பரப்படுத்தியதன் மூலமாக 170 கோடி ரூபாயையும் சம்பாதித்து இருக்கிறார். ஒட்டுமொத்தமாக இந்த இரண்டு மாதத்தில் மட்டும் 185 கோடி விராட் கோலி சம்பாதித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது!