“இங்கிலாந்து அணியை ட்ரெஸ்ஸிங் ரூமில் வைத்து பூட்டி விடலாம்!” – பாகிஸ்தான் அரையிறுதி வாய்ப்பு பற்றி வாசிம் அக்ரம் பேச்சு!

0
1783
Akram

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் ஆசியா கண்டத்து இந்திய மண்ணில் நடக்கின்ற காரணத்தினால், ஆசிய நாடுகள் உலகக்கோப்பை தொடரில் தாக்கத்தை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த வகையில் போட்டியை நடத்தும் இந்தியாவும் அடுத்து பாகிஸ்தான் அணியும் அரை இறுதிக்கு வரும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கணித்தார்கள்.

- Advertisement -

மேலும் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் பெரிய அணிகள் சிலவற்றுக்கு அதிர்ச்சி தோல்விகளை கொடுக்கக்கூடும் என்றும் கணிப்புகள் இருந்து வந்தன.

இந்த கணிப்புகளில் இந்திய அணி மட்டுமே மிக அற்புதமாக செயல்பட்டு அரை இறுதிக்கு வந்திருக்கிறது. மற்ற அணிகள் எல்லாமே இந்த உலகக்கோப்பையில் தங்கள் நாட்டுக்கு ஏமாற்றத்தையே கொடுத்திருக்கின்றன.

அரைஇறுதிக்கு வரும் என்று கணிக்கப்பட்ட பாகிஸ்தான் முதல் இரண்டு போட்டிகளில் வென்று, அதற்கடுத்து நான்கு போட்டிகளில் தொடர்ந்து தோற்று பெரிய விமர்சனங்களை சந்தித்து, அடுத்து இரண்டு போட்டிகளை வென்று தற்பொழுது 8 புள்ளிகள் உடன் இருக்கிறது.

- Advertisement -

இலங்கை நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியில் நியூசிலாந்து தோற்க வேண்டும் இல்லை குறைவான ரன் ரேட்டில் வெற்றி பெற வேண்டும் என்று பாகிஸ்தான் எதிர்பார்த்திருந்தது.

ஆனால் பாகிஸ்தானில் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக நியூசிலாந்து வெற்றி பெற்றது மட்டும் இல்லாமல், இலங்கை கொடுத்த இலக்கை 23 ஓவர்களில் விரட்டி வெற்றி பெற்று, பெரிய ரன் ரேட் எடுத்துக் கொண்டது.

இதன் காரணமாக பாகிஸ்தான் தன்னுடைய கடைசி போட்டியில் இங்கிலாந்து அணியை மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டி இருக்கிறது. உதாரணமாக பாகிஸ்தான் 300 ரன்கள் அடித்தால் இங்கிலாந்து அணியை 13 ரன்களுக்கு சுருட்ட வேண்டும். மேலும் இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தால் பாகிஸ்தானுக்கு இந்த வாய்ப்பு கூட கிடையாது.

இதுகுறித்து பேசி உள்ள வாசிம் அக்ரம் கூறும் பொழுது “பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து ரன்கள் எடுக்க வேண்டும். அடுத்து இங்கிலாந்து வீரர்களை ட்ரெஸ்ஸிங் ரூமில் வைத்து பூட்டி டைம் அவுட் செய்து விட வேண்டும். அப்பொழுதுதான் பாகிஸ்தான் நல்ல ரன் ரேட்டில் வென்று அரையறுதிக்கு வர முடியும்!” என்று நகைச்சுவையாகக் கூறியிருக்கிறார்!