“இந்திய டாப் ஆர்டரை மீண்டும் தூக்குவோம்.. அதுதான் மகிழ்ச்சி!” – மிட்சல் ஸ்டார்க் சவால்!

0
2282
Starc

பொதுவாக உலகக் கோப்பை தொடர் என்றாலே எல்லோருக்கும் முதலில் ஞாபகம் வருகின்ற அணியின் பெயர் ஆஸ்திரேலியதான்.

அவர்கள் இந்த உலகக் கோப்பை தொடர் இல்லாமல் மொத்தம் ஏழு முறை உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறார்கள். அதில் ஐந்து முறை கோப்பையை வென்று அசத்தியிருக்கிறார்கள்.

- Advertisement -

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அவர்கள் இரண்டு முறை மட்டுமே தோல்வி அடைந்திருக்கிறார்கள். ஒருமுறை அவர்களை வெஸ்ட் இண்டீஸ் வீழ்த்தியது இன்னொரு முறை அவர்களை இலங்கை வீழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

நடப்பு ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் முதல் இரண்டு போட்டிகளை தோற்று அந்த நேரத்தில் புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தில் இருந்த ஆஸ்திரேலியா, இதற்கு அடுத்து தொடர்ந்து எட்டு போட்டிகளை வென்று, இறுதிப் போட்டிக்கு எட்டாவது முறையாக முன்னேறி அசத்தியிருக்கிறது.

நேற்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான அறையிறது போட்டியில் ஆஸ்திரேலியாவின் முதல் இரண்டு வேகப்பந்துவீச்சாளர்கள் மிட்சல் ஸ்டார்க் மற்றும் ஹேசில்வுட் இருவரும் தொடர்ச்சியாக 14 ஓவர்கள் வீசினார்கள். மேலும் ஆஸ்திரேலியாவின் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களும் சேர்ந்து எட்டு விக்கெட் கைப்பற்றினார்கள். பெரிய போட்டியில் ஆஸ்திரேலியாவின் முக்கிய வீரர்கள் அனைவரும் திரும்பினார்கள். அவர்களுடைய வழக்கமான போராட்டத்தை நேற்று பார்க்க முடிந்தது.

- Advertisement -

இந்த நிலையில் வெற்றிக்கு பிறகு பேசி உள்ள ஆஸ்திரேலியா வேகப்பந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் கூறும்பொழுது ” இது அனேகமாக நான் விரும்பிய போட்டியாக இருக்கவில்லை. ஆனாலும் கூட பெரிய போட்டியில் வென்று அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஹேசில்வுட் பந்துவீச்சில் 8 ஓவர்களுக்கு 12 ரன்கள் மட்டுமே கொடுத்திருக்கிறார். அவருடைய பிட்ச் மேப்பை பார்க்கும் பொழுது, அவர் டெஸ்ட் மேட்ச் லென்த்தில் மிகவும் சிறப்பாக இருக்கிறார் என்று நினைக்கிறேன். நாங்கள் இருவரும் சேர்ந்து பெரிய போட்டியில் நல்ல வேகத்தை எடுக்க சிறப்பாக செயல்பட்டது மகிழ்ச்சியாக இருக்கிறது.

டாப் ஆர்டர்களை எடுப்பதற்காகத்தான் நாங்கள் விளையாட்டுகளை விளையாடுகிறோம். நாங்கள் சிறந்ததை எடுக்க விரும்புகிறோம். இந்தியா இதுவரையில் இந்த உலகக்கோப்பையில் சிறப்பாக விளையாடியிருக்கிறார்கள். நாங்கள் இருவரும் இறுதி போட்டிக்கு வந்திருக்கிறோம்.

இதுதான் உலகக்கோப்பை இங்கு சிறந்ததைதான் நீங்கள் எடுக்க வேண்டும். நாங்கள் மீண்டும் இந்திய டாப் ஆர்டரை எடுப்போம். நாங்கள் நிச்சயம் இந்த தொடரில் மிகச் சிறப்பாக செயல்படும் இந்தியாவுக்கு எதிராக வருவோம்.

இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக நாங்கள் விளையாடினோம். இப்போது மீண்டும் கடைசியில் அவர்களுக்கு எதிராக விளையாடுகிறோம். இந்த உலகக் கோப்பையில் நாங்கள் பெற வேண்டிய இடம் அதுதான்.

இரு அணிகளும் 2003 ஆம் ஆண்டு மோதிக்கொண்ட உலகக் கோப்பை இறுதி போட்டியில் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது. அப்பொழுது நான் தூங்கிக் கொண்டிருந்திருப்பேன். மேலும் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது!” என்று நகைச்சுவையாகக் கூறியிருக்கிறார்!