“கோலி விஷயத்தில் ரவி சாஸ்திரி சொன்னதை செய்யலாம்!” – மீண்டும் பரபரப்பை கிளப்பும் சுனில் கவாஸ்கர்!

0
525
Virat

இந்திய அணி தற்பொழுது உள்நாட்டில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல் போட்டி இன்று பஞ்சாப் மாநிலம் மொகாலி மைதானத்தில் துவங்குகிறது.

இந்தத் தொடரில் முதல் இரண்டு போட்டிகளுக்கு நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் ஆகிய நால்வருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

இதற்கு அடுத்து இந்திய அணி இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பைக்கு இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது. இதற்கு அடுத்து அக்டோபர் எட்டாம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இதே ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தனது முதல் போட்டியில் விளையாடுகிறது.

நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி நான்காவது இடத்தில் பேட்டிங் செய்வது இந்திய அணிக்கு நல்லதாக இருக்கும் என்று முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேசியிருந்தார். விராட் கோலி நான்காம் இடத்தில் விளையாடி 1700 ரன்கள் எடுத்து ஏழு சதங்கள் அடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்பொழுது இதுகுறித்து பேசி உள்ள இந்திய அணியின் பிரபல லெஜன்ட் வீரர் சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது “பேட்டிங் ஆர்டரை பொறுத்தவரை எந்த அணியும் நெகிழ்வாக இருக்க வேண்டும். நான் டாப் ஆர்டரை தொந்தரவு செய்ய விரும்பவில்லை. அணியின் கேப்டன் ரோகித் சர்மாவை நான் கீழே பேட்டிங் செய்ய வேண்டும் என்று நினைக்கவில்லை. ஒரு விக்கெட் விழும் பொழுது, புதிய பந்து சேதாரங்களை உண்டாக்கும் பொழுது, பாதுகாப்பாக விராட் கோலி நான்காம் இடத்தில் வரலாம்.

- Advertisement -

ஒவ்வொரு முறையும் இந்தியா தோற்றபோது முதல் 10 இல்லை 12 ஓவர்களில் மூன்று அல்லது நான்கு விக்கெட்டுகளை இந்திய அணி இழந்தது. இதில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் விக்கெட்டுகளும் அடக்கம். இந்தச் சூழ்நிலையை வைத்து நாம் இதை அணுகலாம்.

இந்தியா ஒரு அபாரமான பேட்டிங் வரிசையை வைத்திருக்கிறது. எனவே இந்திய அணியின் ஒன்பதாவது மற்றும் பத்தாவது பேட்ஸ்மேன்கள் களம் இறங்குவது அரிதானது. ஏனென்றால் டாப் ஆர்டர் மிகவும் சிறப்பாக இருக்கிறது. இந்த இடத்தில் எல்லோரும் பேட்டிங் செய்ய வேண்டும் என்று நான் நினைக்கவில்லை!” என்று கூறியிருக்கிறார்!