இன்னைக்கு என்ன செஞ்சமோ நாளைக்கு அத வந்து செய்வோம்.. சீரியஸ் அடிப்போம் – கேப்டன் ஹார்திக் பாண்டியா!

0
532
Hardikpandya

இந்திய வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இன்று நான்காவது போட்டி அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் நடைபெற்றது. இந்த தொடரில் வெஸ்ட் இண்டீஸ் இரண்டு ஆட்டங்களையும் ஒரு ஆட்டத்தை இந்திய அணியும் வென்று இருப்பது குறிப்பிடத்தக்கது!

டாசில் வென்று முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 178 ரன்களை எட்டு விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்களுக்கு எடுத்தது. அந்த அணிக்கு ஷாய் ஹோப் 46 ரன்கள், சிம்ரன் ஹெட் மையர் 61 ரன்கள் எடுத்தார்கள். அர்ஸ்தீப் மூன்று விக்கட்டுகள் கைப்பற்றினார்.

- Advertisement -

வென்றே ஆக வேண்டிய நிலையில் விளையாடிய இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் கில் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இருவரும் முதல் விக்கட்டுக்கு 165 ரன்கள் சேர்த்தார்கள். கில் 77 ரன்களில் வெளியேற, ஜெய்ஸ்வால் 84 ரன்கள் உடன் களத்தில் இருந்து வெற்றியை உறுதி செய்தார்.தற்பொழுது 2-2 என தொடர் சமநிலையில் இருக்கிறது.

வெற்றிக்குப் பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா
“கில் மற்றும் ஜெய்ஸ்வால் ஆட்டம் புத்திசாலித்தனமாக இருந்தது. அவர்களின் திறமை மீது எந்தச் சந்தேகமும் கிடையாது. அவர்கள் விக்கட்டுக்கு இடையே சிறிது நேரம் செலவிட வேண்டி இருந்தது. நாம் முன்னேறி சென்று ஒரு பேட்டிங் குழுவாக பந்துவீச்சாளர்களை ஆதரிக்க வேண்டும். அதிகப் பொறுப்பை பேட்டிங் யூனிட் ஏற்றுக்கொள்ள வேண்டும். பந்துவீச்சாளர்கள் ஆட்டத்தை வென்று கொடுப்பார்கள் என்று நான் எப்பொழுதும் நம்புவேன். கில் மற்றும் ஜெய்ஸ்வால் புத்திசாலித்தனமாக விளையாடியதை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது.

கடந்த இரண்டு ஆட்டங்களிலும் பொதுவாகவும் என்னுடைய கேப்டன்ஷிப் என்பது என்னுடைய உள் உணர்வின்படி நான் செய்வதுதான். நாங்கள் முதல் இரண்டு ஆட்டங்களில் தோற்றோம். முதல் ஆட்டத்தில் நாங்கள் எங்களுடைய தவறால் தோற்றோம். கடைசி நான்கு ஓவர்களில் கையில் இருந்த வெற்றியை விட்டு விட்டோம். இப்படியான தோல்விகள் எப்படி நம்முடைய கேரக்டரை வெளிப்படுத்தும் என்று நாங்கள் பேசினோம்.

- Advertisement -

அந்த விளையாடிய இரண்டு ஆட்டங்கள் நாங்கள் மீண்டும் எப்படி வரவேண்டும் என்று எங்களை உணர்த்தி உத்வேகப்படுத்தியது. டி20 கிரிக்கெட்டில் இவர்கள்தான் வெற்றி பெறுவார்கள் என்று யாரும் உறுதியாக கிடையாது.

நீங்கள் திரும்பி வந்து எப்பொழுதும் நல்ல கிரிக்கெட்டை விளையாட வேண்டும். உங்களது எதிரணியை மதிக்க வேண்டும். அவர்கள் எங்களை விட சிறந்த கிரிக்கெட் விளையாடிய காரணத்தினால்தான் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று வலுவான முன்னிலையில் இருந்தார்கள். நாங்கள் இன்று செய்ததை நாளை திரும்பி வந்து அப்படியே செய்ய வேண்டும்!” என்று கூறி இருக்கிறார்!