அவங்கவங்க இடத்துல அவங்கவங்க விளையாடனும் ; எதுக்காக கண்ட இடத்துக்கு டீம்களை துரத்தனும்? – ஆகாஷ் சோப்ரா போர்க்கொடி!

0
240
Aakash

இன்று ஐபிஎல் தொடரில் பஞ்சாப் டெல்லி அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி இமாச்சல் பிரதேஷ் மாநில தர்மசாலாவில் நடக்க இருக்கிறது!

இந்த இரண்டு அணிகளுக்குமே இது சொந்த மைதானம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஐபிஎல் தொடரில் இதற்கு முன்பு ராஜஸ்தான் அணி ஆரம்பப் போட்டிகளை அசாம் கவுகாத்தி மைதானத்தில் விளையாடியது.

- Advertisement -

ஒவ்வொரு அணிகளும் தங்களது சொந்த மைதானத்தில் விளையாடி, சொந்த மைதானத்தின் அனுகூலங்களை அனுபவித்து வருகின்றார்கள். ஆனால் ஐபிஎல்-லை இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கும் நேரில் கொண்டு செல்ல இந்த அணிகள் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

தற்பொழுது இது குறித்து தனது அதிருப்தியை ஆகாஷ் சோப்ரா தெரிவித்திருக்கிறார். மேலும் பஞ்சாப் அணிக்கு ப்ளே ஆப்ஸ் வாய்ப்பு எப்படி இருக்கிறது என்றும் பேசியிருக்கிறார்.

இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது ” குஜராத் அணி நம்பர் 1 இடத்தில் நீடிக்கப் போகிறது. எந்த அணியும் 18 புள்ளிகளை இனி எட்டாவது என்பதால் குஜராத் அணியின் இடத்தில் எந்த மாற்றமும் நடக்கப் போவதில்லை.

- Advertisement -

சென்னை மற்றும் லக்னோ அணிகள் 17 புள்ளிகளை எட்டலாம். மேலும் பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் 16 புள்ளிகளை எட்ட முடியும். பஞ்சாப் அணிக்கு பிளே ஆப்ஸ் வாய்ப்பு முழுமையாக எதார்த்தமாக இருக்கிறது.

போட்டி தர்மசாலா மைதானத்தில் நடக்கிறது. இது ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டிக்காக அறிவிக்கப்பட்டு பின்பு சூழ்நிலை சரியில்லாததால் மாற்றப்பட்டது. இப்போது அது தயாராகி விட்டதா என்று தெரியாது. மேலும் இரவில் பனிப்பொழிவு வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

நீங்கள் உங்களது ஹோம் கிரவுண்டை விட்டு தேவையில்லாமல் வெளியே சென்று ஆடுவது எனக்குப் பிடிக்காது. ராஜஸ்தான் கவுகாத்திக்கு சென்றார்கள் இவர்கள் தர்மசாலாவிற்கு செல்கிறார்கள். இது ஒரு அழகான மைதானம் ஆனால் உங்களின் ஹோம் கிரவுண்ட் கிடையாது.

தொடரின் கடைசியில் நீங்கள் ஒரு முறை சறுக்கினால் கூட 16 புள்ளிகளை எட்ட முடியாது. நீங்கள் ஒரு விசிட்டர் அணி போல அந்நியமான சூழ்நிலைக்கு செல்கிறீர்கள். எனவே தனிப்பட்ட முறையில் இது எனக்கு பிடிக்கவில்லை!” என்று கூறியிருக்கிறார்!