புஜாராவை விளையாட விடுங்கள்; அவருக்குத் தெரியும்- ரோஹித் சர்மாவுக்கு ஹர்பஜன் சிங் அறிவுரை!

0
403
Rohitsharma

ஆசஸ் டெஸ்ட் தொடரின் மதிப்பை விட தற்பொழுது இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடந்து வரும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கு மதிப்பு கூடியிருக்கிறது!

காரணம், ஆஸ்திரேலியாவில் கடந்த இரண்டு முறை சுற்றுப் பயணம் செய்து இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றது. அடுத்து ஆஸ்திரேலியா அணிக்கு இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்வது எப்பொழுதும் ஒரு பெரிய கனவாகவே இருந்து வந்தது. இதனால் ஆசஸ் தொடரை விட பார்டர் கவாஸ்கர் தொடரே முக்கியம் என்று ஆஸ்திரேலியா அணியே அறிவித்திருந்தது!

- Advertisement -

முதலில் நடைபெற்ற இரண்டு போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருக்க, நேற்று துவங்கிய மூன்றாவது போட்டியில் 10 விக்கட்டுகளுக்கு 76 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நேர்மறையான நிலையில் தற்பொழுது ஆஸ்திரேலியா அணி மீண்டும் வந்திருக்கிறது.

இன்று இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடிக் கொண்டிருந்த பொழுது புஜாராவை மிட் ஆன் திசையில் தூக்கி அடிக்க கேப்டன் ரோஹித் சர்மா இசான் இடம் சொல்லி அனுப்பினார். அதற்குப் பிறகு புஜாராவும் அவ்வாறு ஒரு சிக்ஸ் அடித்தார். ஆனால் அதே வேகத்தில் ஆட போய் ஸ்மித்தால் அபாரமாக கேட்ச் செய்யப்பட்டு கடைசி நேரத்தில் வெளியேறினார்.

இந்த நிலையில் இது குறித்து ஹர்பஜன்சிங் கூறும் பொழுது “அனுப்பிய உண்மையான செய்தி என்னவென்று எனக்குத் தெரியாது. மிட்ஆன் திசையில் தூக்கி அடித்து விளையாட வேண்டும் என்பது செய்தியாக இருந்தால், உள்ளே விளையாடிக் கொண்டிருக்கும் வீரருக்குதான் சூழ்நிலை மிக நன்றாக தெரியும். பந்து என்ன செய்கிறது என்பதும் அவருக்குத்தான் தெரியும். அவரையே விளையாட விட வேண்டும். அந்த சூழ்நிலையில் என்ன செய்ய வேண்டும் என்று அவரே புரிந்து கொள்வார்” என்று கூறி இருக்கிறார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
“மிட் ஆன் திசையில் அடிப்பது கடினமா அல்லது சுலபமா என்று அவரை விட வேறு யாராலும் தீர்மானிக்கவும் முடியாது. ஆனால் வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அந்த திசையில் தூக்கி அடிப்பது எளிதாக தெரியும். ஏதாவது செய்ய வேண்டும் என்று அணியிடமிருந்து வெளியில் இருந்து செய்தி வந்தால் அதை புஜாரா நிச்சயம் செய்வார். அணிக்கு என்ன தேவையோ அதை செய்யக்கூடியவர். அதனால் அவர் ரன் எடுக்க போனார். சிக்ஸர் அடிக்க வேண்டும் என்று நினைத்தால் மற்றவர்களை விட அவரால் சிறப்பாகவே அடிக்க முடியும் என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் ஒரு டி20 பிளேயரால் டெஸ்ட் விளையாடுவதுதான் கடினம். ஆனால் ஒரு டெஸ்ட் பிளேயரால் டி20 கிரிக்கெட் எப்பொழுதும் விளையாட முடியும்!” என்று கூறியிருக்கிறார்.