அடிச்சு சொல்றேன்.. இந்த 4 டீம்தான் உலக கோப்பை செமி பைனலுக்கு வரும் – சேவாக் உறுதியான கணிப்பு!

0
2987
Shewag

கிரிக்கெட்டில் டி20 வடிவத்திற்கும் டெஸ்ட் வடிவத்திற்கும் உலக கோப்பைகள் இருந்தாலும், ஒருநாள் கிரிக்கெட் வடிவத்திற்கு நடத்தப்படும் உலகக் கோப்பைக்கு எப்பொழுதும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு உண்டு. மேலும் கிரிக்கெட்டுக்கு என நடத்தப்பட்ட முதல் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் வடிவத்திற்குதான் நடத்தப்பட்டது!

முதல் உலகக் கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியும், அதிக முறை உலக கோப்பையை ஆஸ்திரேலியா கைப்பற்றியதும், இந்தியா இரண்டு முறை கைப்பற்றியதும் என ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை வரலாறுகள் நாம் அறிந்ததே!

- Advertisement -

2011ம் ஆண்டுக்கு பிறகு சுமார் 12 வருடங்கள் கழித்து இந்தியாவில் தற்பொழுது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் நடக்க இருக்கிறது. இதில் ஒரு விசேஷமாக இந்த உலகக் கோப்பை தொடர் முதல்முறையாக இந்தியாவில் நடத்தப்பட இருக்கிறது. ஆரம்பத்தில் நடந்த இரண்டு உலகக் கோப்பைகள் ஆசிய நாடுகளுடன் பகிர்ந்து நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது!

இந்த முறை நடக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் பங்கேற்கும் பெரிய அணிகள் எல்லாவற்றுக்குமே அழுத்தம் என்பது இயல்பானது. ஆனால் இந்திய அணிக்கு சொந்த நாட்டில் நடப்பதாலும், மேலும் சில பல ஆண்டுகளாக ஐசிசி தொடர்களை இந்திய அணி வென்றதில்லை என்றாலும், மற்ற அணிகளை காட்டிலும் இந்திய அணிக்கு கூடுதல் அழுத்தம் உருவாகி இருக்கிறது.

இந்திய மண்ணில் உலகக் கோப்பை தொடர் நடைபெற இருப்பதால் இந்த முறை எந்த நான்கு அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறும் என்கின்ற கணிப்பு பரவலான முறையில் முன்னாள் வீரர்களிடமிருந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு ஆஸ்திரேலியா லெஜெண்ட் வேகப்பந்துவீச்சாளர் மெக்ராத் தன்னுடைய கணிப்பை கூறியிருந்தார்.

- Advertisement -

தற்பொழுது இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரரான வீரேந்திர சேவாக் இந்த உலகக் கோப்பை தொடரில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்று தனது கணிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

வீரேந்திர சேவாக் இந்த உலகக் கோப்பைக்கான அரையிறுதி அணிகளாக போட்டியை நடத்தும் இந்தியா, நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து, அதிக முறை ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா, கடந்த முறை அரையிறுதிக்கு முன்னேறாத பாகிஸ்தான் ஆகிய நான்கு அணிகளையும் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

கடந்த சில வருடங்களாக நடைபெற்ற மூன்று வடிவிலான கிரிக்கெட் உலகக் கோப்பைகளிலும் இறுதிப்போட்டிக்கு வந்து பெரிய தாக்கத்தையும், அதிர்ச்சியையும் மற்ற அணிகளுக்கு கொடுத்த நியூசிலாந்து அவரது தேர்வில் இல்லை. இந்திய சூழ்நிலையில் பாகிஸ்தான் நன்றாக செயல்படுவதற்கு வாய்ப்பிருக்கின்ற காரணத்தினால், அந்த அணியை கணிப்பில் கொண்டு வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது!