லெஜன்ட்ஸ் கிரிக்கெட் லீகின் முதல் சீசனில் பங்கேற்கும் அணிகள் அறிவிப்பு – ஜனவரியில் கோலாகலமாக தொடக்கம்

0
202
Legends Cricket Leauge

2007ம் ஆண்டுக்குப் பிறகு சர்வதேச அளவில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அனைத்து கிரிக்கெட் ரசிகர்களாலும் ஈர்க்கப்பட்டது. பிசிசிஐ இந்தியன் பிரீமியர் லீக் என்கிற தொடரை அதற்கு அடுத்த ஆண்டு ஆரம்பித்தது. நாளடைவில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளை போலவே டி20 கிரிக்கெட் போட்டிகள் மிகக் குறுகிய நாட்களில் அனைவரும் ரசித்து பார்க்கக்கூடிய போட்டியாக இன்று வளர்ந்திருக்கிறது.

சீனியர் கிரிக்கெட் வீரர்கள் நடப்பு கிரிக்கெட் வீரர்களுடன் ஒன்றிணைந்து கடந்த ஆண்டு தி பிக் அப்பீல் என்கிற குறுகிய போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடினார்கள். ஆஸ்திரேலியா புஷ்ஃபயர் தீ விபத்துக்கு நிவாரணம் திரட்டும் முயற்சியில் இந்த தொடர் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. அதேபோல இந்தியாவில் சாலை பாதுகாப்பு குறித்து நடத்தப்பட்ட டி20 தொடரில் முற்றிலுமாக ஓய்வுபெற்ற சீனியர் கிரிக்கெட் வீரர்கள் களம் இறங்கி தங்களது சர்வதேச அணிக்காக விளையாடினார்கள்.

- Advertisement -

அடுத்த வருடம் ஓமனில் நடைபெற உள்ள லெஜன்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர்

தற்பொழுது இந்தியா, ஆசியா மற்றும் உலக அணி என்று மூன்று அணிகளை கொண்ட லெஜன்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஓமனில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் சீனியர் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் பங்கேற்று விளையாட போகின்றனர்.

மூன்று அணிகளாக அவர்கள் பிரிக்கப்பட்டு இந்தியா சார்பாக ஒரு அணியிலும், ஆசிய கண்டத்தைச் சார்ந்த ஒரு அணியிலும், அதேபோல உலக பிளேயிங் xi என்கிற ஒரு அணியிலும் விளையாட போகின்றனர்.இந்த தொடரின் கமிஷனராக இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும் மற்றும் இந்திய முன்னாள் தலைமை பயிற்சியாளருமான ரவிசாஸ்திரி பொறுப்பேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த தொடர் குறித்த கூடுதல் விவரங்கள் இனிவரும் நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்பொழுது இந்த தொடர் குறித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

- Advertisement -