லெஜண்ட்ஸ் கிரிக்கெட் டிராபி 2024.. 7 டீம் 95 வீரர்கள்.. எந்த சேனலில் பார்க்கலாம்.. முழு விவரம்

0
8830

சர்வதேசப் போட்டிகளில் ஓய்வு பெற்ற மூத்த வீரர்கள் பங்குபெறும் லெஜண்ட்ஸ் கிரிக்கெட் டிராபி தொடரின் இரண்டாவது சீசன் மார்ச் மாதம் 8ம் தேதி இலங்கையில் உள்ள கண்டியில் நடைபெற உள்ளது. ஏழு அணிகள் கலந்து கொள்ளும் இப் போட்டி மார்ச் எட்டாம் தேதி முதல் 19ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

நியூயார்க் சூப்பர் ஸ்ட்ரைக்கர்ஸ், துபாய் ஜெயண்ட்ஸ், டெல்லி டெவில்ஸ், ராஜஸ்தான் கிங்ஸ், கொழும்பு லயன்ஸ், கண்டி சாம்ப் ஆர்மி மற்றும் பஞ்சாப் ராயல்ஸ் என மொத்தம் ஏழு அணிகள் பங்கேற்கின்றன. சென்ற ஆண்டைப் போலவே டி20 வடிவத்தில் இத்தொடர் நடத்தப்படாமல், 90 பந்துகள் கொண்ட குறுகிய வடிவத்தில் நடைபெறுகிறது. அதாவது 15 ஓவர்கள் மட்டுமே விளையாடப்படும்.

- Advertisement -

இதன் முதல் போட்டி 8ம் தேதி மாலை 7 மணிக்கு துபாய் ஜெயண்ட்ஸ் மற்றும் நியூயார்க் சூப்பர் ஸ்ட்ரைக்கர்ஸ் அணிகள் மோதின. இத்தொடரைப் பிரபலப்படுத்தும் வகையில், இந்தியாவின் முன்னணி வீரர்களாக இருந்த யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் மற்றும் ராபின் உத்தப்பா ஆகியோர் இந்த அணிகளுக்கு கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் கிறிஸ் கெயில் மற்றும் ஆரோன் பிஞ்ச் போன்ற வெளிநாட்டு வீரர்களும் இடம் பெறுகின்றனர். இத்தொடருக்கான அணிகளைப் பற்றிக் காண்போம்.

கொழும்பு லயன்ஸ்: கிறிஸ் கெய்ல் (கேப்டன்), ராஸ் டெய்லர், பென் டன்க் (விக்கெட் கீப்பர்), டேரன் பிராவோ, ஜெஸ்ஸி ரைடர், அஸ்கர் ஆப்கான், நவ்ரூஸ் மங்கல், யாசிர் ஷா, சுல்பிகர் பி தவ்லத் சத்ரன், ராபர்ட் ஃப்ரைலின்க், முஹம்மது இர்பான், காலித் உஸ்மான்.

டெல்லி டெவில்ஸ்: சுரேஷ் ரெய்னா (கேப்டன்), ஷாகித் அப்ரிடி, ஜேக்கப் ஓரம், அம்பதி ராயுடு, சோஹைல் தன்வீர், மாட் பிரியர் (விக்கெட் கீப்பர்), அனுரீத் சிங், பிரவீன் குப்தா, சமன் ஜெயந்தா, இஷான் மல்ஹோத்ரா, பிரவின் தம்பே, இக்பால் அப்துல்லா, நாகேந்திரா.

- Advertisement -

துபாய் ஜெயண்ட்ஸ்: ஹர்பஜன் சிங் (கேப்டன்), ஷான் மார்ஷ், ரிச்சர்ட் லெவி, சாலமன் மியர், திசரா பெரேரா, ஜொனாதன் கார்ட்டர், சாமுவேல் பத்ரீ, சுரங்க லக்மல், சச்சித் பத்திரனா, தினேஷ் ராம்டின் (விக்கெட் கீப்பர்), பிடல் எட்வர்ட்ஸ், குர்கீரத் மான், வெர்னான்
பிலாண்டர், சவுரப் திவாரி, பென் லாஃப்லின்.

கண்டி சாம்ப் ஆர்மி: ஆரோன் பின்ச் (கேப்டன்), ஸ்டூவர்ட் பின்னி, ஜோ பர்ன்ஸ், உபுல் தரங்கா (விக்கெட் கீப்பர்), யூசுப் பதான், இர்பான் பதான், சீக்குகே பிரசன்னா, நுவான் குலசேகரா, ஜொனாதன் வெல்ஸ், கெவின் ஓ பிரையன், டினோ பெஸ்ட், கிறிஸ்டோபர் எம்போஃபு, லியாம் பிளங்கெட்

நியூயார்க் சூப்பர் ஸ்டார் ஸ்ட்ரைக்கர்ஸ்: யுவராஜ் சிங் (கேப்டன்), டான் கிறிஸ்டியன், இசுரு உதான, சாட்விக் வால்டன் (விக்கெட் கீப்பர்), ஜெரோம் டெய்லர், ரிக்கார்டோ பவல், அல்விரோ பீட்டர்சன், நுவான் பிரதீப், அசேல குணரத்னே, சாமர கபுகெதர, ராகுல் சர்மா, லஹிரு திரிமான்னே

பஞ்சாப் ராயல்ஸ்: திலகரத்னே தில்ஷன்
(கேப்டன்), மார்ட்டின் குப்டில், நமன் ஓஜா (விக்கெட் கீப்பர்), மிகுவல் கம்மின்ஸ், தில்ஷன் முனவீர, அப்துல் ரசாக், மான்டி பனேசர், அசாத் ஷபிக், ஜாவோன் சியர்லஸ், ஃபில் மஸ்டார்ட், நீல் புரூம், சித்தார்த்த திரிவேதி, உபுல் இந்திரசிறி.

ராஜஸ்தான் கிங்ஸ்: ராபின் உத்தப்பா
(கேப்டன்/விக்கெட் கீப்பர்), லெண்டல் சிம்மன்ஸ், இம்ரான் தாஹிர், ஏஞ்சலோ பெரேரா, ஸ்ரீசாந்த், ஆஷ்லே நர்ஸ், ஹாமில்டன் மசகட்சா, சதுரங்க டி சில்வா, பர்விந்தர் அவானா, பீட்டர் ட்ரெகோ, பவன் நேகி, ஹமித் ஹாசன், பிபுல் சர்மா, ராஜேஷ் பிஷ்னோய்.

இதையும் படிங்க: 2025 ஐபிஎல் மெகா ஏலம் நடக்குமா? எத்தனை வீரர்களை தக்க வைக்கலாம்?.. பிசிசிஐ பதிலால் ரசிகர்கள் மகிழ்ச்சி

இந்தத் தொடரின் அனைத்து போட்டிகளும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 மற்றும் எஸ் ஸ்போர்ட்ஸ் 1 ஹிந்தி மற்றும் இந்தியாவில் உள்ள அனைத்து ஹெச்.டி சேனல்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது. எனவே இத்தொடரினை ரசிகர்கள் அனைவரும் தொலைக்காட்சியின் வாயிலாக இலவசமாக கண்டுகளிக்கலாம்.