கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

“ஆர்சிபி-யை விட்டு கிளம்புங்க விராட் கோலி; இந்த டீம்ல போய் ஜாய்ன் பண்ணுங்க!” – கெவின் பீட்டர்சன் பரபரப்பு ட்வீட்!

விராட் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கையில் கடந்த இரண்டரை ஆண்டுகள் மிகப்பெரிய சரிவைக் கொண்டிருந்தது. இது அவரது மனநிலையையும் பெரிதாகப் பாதித்திருந்தது!

- Advertisement -

இதை அடுத்து கடந்த ஆண்டு ஒரு மாதம் ஓய்வில் சென்ற விராட் கோலி மீண்டும் ஆசியக் கோப்பைக்கு வந்து ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக சதம் அடித்து மீண்டு வந்தார்.

இதற்குப் பிறகு ஒரு நாள் கிரிக்கெட் சதம் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் சதம் என்று எல்லாமே வரிசையாக அவருக்கு வர ஆரம்பித்தது.

இந்த நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் ஆறு அரை சதங்கள் மற்றும் இரண்டு சதங்கள் உடன் 639 ரன்கள் குவித்து தனது ஐபிஎல் ஃபார்முக்கும் திரும்ப வந்துவிட்டார்.

- Advertisement -

ஆனால் வழக்கம்போல் இந்த முறையும் பெங்களூர் அணியில் இவர் சரியாக விளையாட நடுவரிசையில் மொத்தமாக எல்லோரும் சொதப்ப, பரிதாபமாக குஜராத் அணியிடம் தோற்று பிளே ஆப் சுற்று வாய்ப்பில் இருந்து வெளியேறியது.

இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தனது ட்வீட்டில், விராட் கோலி ஆர் சி பி அணியை விட்டு தனது சொந்த மாநிலமான டெல்லி ஐபிஎல் அணியாக இருக்கும் டெல்லி கேப்பிட்டல்s அணிக்காக விளையாட வேண்டும் என்று கூறியிருக்கிறார். தற்போது அவரது கருத்து சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ஆனால் விராட் கோலி ஒவ்வொரு முறை பேசும்பொழுதும் ஆர் சி பி அணி பற்றி கூறுகையில் “இது ஒரு அற்புதமான பயணம். ஐபிஎல் வெல்வது எங்களின் கனவாக இருக்கும். அணியை விட்டு விலகுவது பற்றி நான் சிந்திப்பதற்கான எந்த சூழ்நிலையும் இல்லை. சீசன் சரியாக அமையவில்லை. அதற்காக நீங்கள் உணர்ச்சிவசப்படுவீர்கள். நான் ஐபிஎல் விளையாடும் வரை இந்த அணிக்காகத்தான் விளையாடுவேன். இந்த அணியை விட்டு நான் வெளியேற மாட்டேன். ரசிகர்களின், அவர்களின் விசுவாசம் எனக்கு மிகப் பெரிய ஆச்சரியமான ஒன்று!” என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -
Published by