“விராட் கோலிய விடுங்க.. எங்களோட இந்த பையனை பாருங்க!” – டேல் ஸ்டெயின் ஆச்சரிய பேச்சு!

0
217
Virat

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் முடிந்ததும் தென் ஆப்பிரிக்க அணியில் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டு, தொலைநோக்காக இளைஞர்களை நிரப்பி நகர ஆரம்பித்திருக்கிறார்கள்.

இந்த வகையில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்டில் மூன்று வடிவத்திற்கும் கேப்டனாக இருந்த டெம்பா பவுமாவை டெஸ்ட் வடிவத்திற்கு மட்டும் கேப்டனாக தொடர விட்டு, மற்ற இரண்டு வடிவங்களில் கேப்டனாக மட்டும் இல்லாமல் வீரராகவும் வாய்ப்பு தராமல், எய்டன் மார்க்ரம்மை கேப்டன் ஆக்கி இருக்கிறார்கள்.

- Advertisement -

தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டனாக இருந்து டெம்பா பவுமா மூன்று வடிவத்திலும் இடம்பெற்று விளையாடிய காரணத்தினால், மிகவும் பாதிக்கப்பட்ட ஒரு வீரர் 34 வயதான ரீசா ஹென்றிக்ஸ்.

உதாரணமாக கடந்த டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக டெம்பா பவுமா காயத்தில் இருந்த பொழுது ரீசா ஹென்றி இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருந்தார். ஆனால் காயம் சரியாகி தெம்பா பவுமா திரும்பி வந்ததும், இந்தியாவுடன் ஆன டி20 தொடர் மற்றும் டி20 உலகக் கோப்பை தொடரில் ரீசா ஹென்றிக்ஸ் தனது இடத்தை இழந்தார்.

- Advertisement -

இவருக்கு ஏற்கனவே 34 வயதாகி விட்ட காரணத்தினால், இனி எஞ்சி இருக்கும் காலங்களில் இவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுக்க வேண்டிய அவசியத்தில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகம் இருக்கிறது. இவரும் தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் சரியாகவே செயல்பட்டு இருக்கிறார்.

நேற்றைய போட்டியில் துவக்கத்தில் வந்து அழகான ஷாட்களை விளையாடியதோடு, நம்ப முடியாத ஒரு பெரிய ஷாட்டையும் விளையாடி ஆச்சரியப்படுத்தினார். 27 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் என 49 ரன்கள் அதிரடியாக குவித்து ஆட்டம் இழந்தார். நேற்று தென் ஆப்பிரிக்கா வெல்ல இவரது பேட்டிங் ஒரு முக்கிய காரணம்.

இவர் குறித்து பேசி உள்ள டேல் ஸ்டெயின் “அவர் மிகவும் அழகாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் விளையாடினார். அதே சமயத்தில் அவர் நம்ப முடியாத பவர் கேமையும் வைத்திருக்கிறார். மேலும் அவர் பந்தை அற்புதமாக டைம் செய்கிறார்.

விராட் கோலி அழகான கிளாசிக்கான டைமிங் உடைய கவர் டிரைவ் வைத்திருப்பதை நாம் பேசுகிறோம். ஆனால் இந்த சாட்டை விளையாடுவதில் ரீசா ஹென்றிக்ஸ் மிகச் சிறப்பாக இருக்கிறார். அவர் எவ்வளவு நன்றாக விளையாடினார் என்று நீங்கள் நேற்று பார்த்தீர்கள். அவர் ஆட்டத்தை அழகாக ரீட் செய்து சரியான நேரத்தில் தாக்குதல் நடத்தினார். இது சிறந்த ஆட்டம்!” என்று கூறி இருக்கிறார்!

- Advertisement -