ஐசிசி டி20 ரேங்கிங்: பாகிஸ்தான் தொடரால் நியூஸி அதிரடி முன்னேற்றம்.. இந்திய அணிக்கு எந்த இடம்.?. முழு விபரம்

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பின் ரசிகர்களின் பார்வை ஐபிஎல் தொடர் பக்கம் திரும்பினாலும், சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு மாற்றங்கள் நடந்து வருகிறது. அண்மையில் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. இளம் வீரர்களுடன் விளையாடிய பாகிஸ்தான் அணி, 4-1 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

ஐசிசி தரவரிசை

இந்த நிலையில் ஐசிசி டி20 அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பாகிஸ்தான் அணியை வீழ்த்தி டி20 தொடரை வென்ற நியூசிலாந்து அணி 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 5வது இடத்திற்கும், தென்னாப்பிரிக்கா அணி 6வது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளன.

பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை பின்னடைவை சந்திக்கவில்லை என்றாலும், 7வது இடத்தில் இருக்கிறது. ஆனால் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் பாகிஸ்தான் அணியை கீழே தள்ளிவிட விரைவாக முன்னேறி வருகின்றனர். இந்த ஐசிசி தரவரிசையில் இந்திய அணி வழக்கம் போல் முதலிடத்தில் இருக்கிறது. 269 ரேட்டிங் புள்ளிகளுடன் உச்சத்தில் இருக்கிறது.

- Advertisement -

டி20 உலகக்கோப்பை

இதன்பின் 2வது இடத்திற்கு ஆஸ்திரேலியா அணி 259 ரேட்டிங் புள்ளிகளுடன் 2வது இடத்திலும், 254 ரேட்டிங் புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி 3வது இடத்திலும் உள்ளன. டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் தொடங்கிய இந்திய அணியின் ஆதிக்கம் இப்போதும் தொடர்ந்து வருகிறது. இதனால் இந்திய ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

அதேபோல் 2026ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடர் நடக்கவுள்ளது. அடுத்த ஆண்டு நடக்கும் டி20 உலகக்கோப்பை தொடர் இந்திய மண்ணில் நடக்கவுள்ளது. பாகிஸ்தான் அணி விளையாடும் போட்டிகள் மட்டும் இலங்கை மண்ணில் நடக்கவுள்ளன. மொத்தமாக 12 அணிகள் ஏற்கனவே தகுதிபெற்றுவிட்ட நிலையில், கடைசி 4 அணிகள் தகுதிச்சுற்று அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளன.

- Advertisement -
Published by