போன வருஷம் அவர்கிட்ட சொன்னேன்… இந்த வருஷம் வேற மாதிரி வந்து நிற்கிறார் – வீரரை புகழ்ந்த ஹர்திக் பாண்டியா!

0
30558
Hardik pandya

குஜராத் அகமதாபாத் மைதானத்தில் இன்று ஐபிஎல் 16வது சீசனை 35 வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. ஒரு பக்கமாக நடந்து முடிந்த இந்த போட்டியில் 55 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி அபார வெற்றி பெற்றது!

மும்பை டாசை வெல்ல முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கில்,டேவிட் மில்லர், அபினவ் மனோகர் மற்றும் ராகுல் திவாட்டியா ஆகியோரது அதிரடியில் ஆறு விக்கட்டுகள் இழப்புக்கு 206 ரன்கள் குவித்தது.

- Advertisement -

பெரிய இலக்கை நோக்கி களம் இறங்கிய மும்பை அணிக்கு எந்த ஒரு பேட்ஸ்மேன்களும் சரியான பங்களிப்பை தரவில்லை. கேமரூன் கிரீன் 33 ரன்கள் வதேரா 40 ரன்கள் மட்டுமே எடுத்தார்கள். முடிவில் 152 ரன்கள் மட்டும் ஒன்பது விக்கட்டுகள் இழப்புக்கு எடுத்து 55 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி தோல்வி அடைந்தது.

வெற்றிக்குப் பின் பேசிய குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா
” இது எப்போதுமே எனது குறிக்கோள். நான் முன் திட்டங்களோடு ஆட்டத்தில் விளையாடியதை விட அந்த அந்த நேரத்தில் உள்ளுணர்வு சொல்லும்படிதான் விளையாடுவேன். நான் என்னுடைய கேப்டன்சி என்னுடைய உள்ளுணர்வின் படியானது. எனக்கும் ஆசிஸ் நெக்ராவுக்குமான மைண்ட் செட் 99 சதவீதம் ஒரே மாதிரியானது. எங்களுடைய அழைப்புகள் இந்த அளவில் ஒரே மாதிரிதான் இருக்கும். இன்று ரசித் கான் மற்றும் நூர் அகமதுவை வைத்து வேகத்தை விரும்பக்கூடிய கேமரூன் கிரீன் மற்றும் டிம் டேவிட் இருவருக்கு எதிராகவும் வேகத்தை எடுத்து விட முடிவு செய்தோம்!” என்று கூறியிருக்கிறார்!

மேலும் தொடர்ந்து அபினவ் மனோகர் பற்றி பேசிய ஹர்திக் பாண்டியா “இது முழுமையான கடினமான வேலை. அவர் வலையில் அதிகப்படியான பந்துகளை எதிர் கொண்டு அடிக்கிறார். இதற்கு அணியின் ஊழியர்களுக்கு பெருமை சேர்க்க வேண்டும். நாங்கள் கடந்த வருடம் இது குறித்து அவரிடம் பேசி இருந்தோம். இந்த வருடம் அவர் எங்கள் அணியில் யாரையும் விட சிறப்பாக அடிப்பவராக இருக்கிறார். இப்படி அணியாக ஒவ்வொரு விஷயத்திலும் முன்னேறி செல்வது மகிழ்ச்சியான ஒன்றாக இருக்கிறது!” என்று கூறி இருக்கிறார்!

- Advertisement -