“போன முறை நடந்ததே போதும்.. இந்த முறை திட்டத்தை இப்படி மாத்திட்டேன்” – சூரியகுமார் சுவாரசியமான பேச்சு!

0
5843
Surya

இந்திய அணி இன்று பஞ்சாப் ராய்ப்பூர் மைதானத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரின் நான்காவது போட்டியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரை கைப்பற்றி இருக்கிறது.

ஏற்கனவே இந்திய அணி மூன்று போட்டிகள் நடைபெற்றதில் இரண்டு போட்டிகளை வென்று இருந்தது. இந்த போட்டியில் வென்றதன் மூலம் இந்திய அணியின் வசம் தொடர் வந்திருக்கிறது. ஆஸ்திரேலியா அணி இந்தியா அணிக்கு எதிராக தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக டி20 தொடரை இழந்திருக்கிறது.

- Advertisement -

இன்று டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு துவக்காட்டக்காரர்கள் ஜெய்ஸ்வால் 37, ருத்ராஜ் 32 ரன்கள் எடுத்துக் கொடுத்தார்கள். முதல் வாய்ப்பு பெற்ற ஸ்ரேயாஸ் 8, கேப்டன் சூரியகுமார் 1 ரன் என வெளியேற நெருக்கடி உண்டானது.

ஆனாலும் ரிங்க்டோசிங் வழக்கம் போல் சிறப்பாக விளையாடிய 29 பந்தில் 46 ரன்கள் எடுத்தார். இசான் கிசான் இடத்தில் விளையாடிய ஜித்தேஷ் சர்மா அதிரடியாக 19 பந்தில்35 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 174 ரன்கள் எடுத்தது.

இதற்கடுத்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணிக்கு யாரும் பெரிய பங்களிப்பு தராத காரணத்தினால், 20 ஓவர்கள் முடிவில் அந்த அணியால் 154 ரன்கள் மட்டுமே 7 விக்கெட் இழப்புக்கு எடுக்க முடிந்தது. இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

- Advertisement -

வெற்றிக்குப் பின் பேசிய கேப்டன் சூரியகுமார் யாதவ் “டாஸ் தவிர இன்று ஆட்டத்தில் எல்லாமே எங்கள் பக்கத்தில் சென்றது. வீரர்கள் சிறப்பான கேரக்டரை வெளிப்படுத்தினார்கள். அது எங்களுக்கு மிக முக்கியமானது.

ஒவ்வொருவரும் மிக தைரியமாக அவர்களுடைய ஆட்டத்தை வெளிப்படுத்துமாறு நான் எல்லோருக்கும் கூறி இருந்தேன். நான் எப்பொழுதும் அக்சர் படேலை அழுத்தத்தின் கீழ் வைப்பதை விரும்புகிறேன். அவர் பந்து வீசிய விதம் நம்ப முடியாததாக இருந்தது.

கடந்த முறை போல் இல்லாமல், இந்த முறை கடைசிக்கட்ட ஓவர்களுக்கு வேகப்பந்துவீச்சாளர்களை வைத்து யார்கர்கள் வீசுவதுதான் என்பதை திட்டமாக மாற்றி விட்டேன். அதில் என்ன நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தோம்” என்று கூறியிருக்கிறார்!