கடைசி 6 பந்தில் 11 ரன்கள், முதல் பந்தில் சிக்ஸ் அடித்து அவுட்டான விராட் கோலியை சிறப்பாக வரவேற்ற ரோகித் சர்மா – வீடியோ உள்ளே!

0
640

இந்தியா வந்த ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. முதல் இரு ஆட்டங்களின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்று தொடர் சமனில் இருந்தது.

வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி ஹைதராபாத் ராஜீவ்காந்தி மைதானத்தில் நடந்தது. இப்போட்டியில் டக்ஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங்கை துவங்க வந்த ஜோடியில் கேப்டன் ஆரோன் பின்ச் 7 ரன்களில் அவுட் ஆனார். ஆனால் இன்னொரு தொடக்க ஆட்டக்காரரான இளம் வீரர் கேமரூன் கிரீன் இந்திய பந்து வீச்சை துவம்சம் செய்தார். வெறும் 21 பந்துகளில் 7 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 52 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

அதன்பின் இந்திய பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை எடுத்து ரன்களை கட்டுக்குள் கொண்டுவந்தனர். கீழ் வரிசையில் வந்த இளம் வீரர் டேவிட் ஆஸ்திரேலிய அணிக்காக தனது முதல் சர்வதேச அரை சதத்தை பூர்த்தி செய்து சரிவிலிருந்து மீட்டார். அவர் 2 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 27 பந்தில் 54 ரன்கள் குவித்தார். 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 186 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் மிகச் சிறப்பாக பந்து வீசிய அக்சர் படேல் 4 ஓவர்கள் பந்துவீசி 33 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் கேஎல் ராகுல்(1), ரோகித் சர்மா(17) இருவரும் சொற்ப ரன்களுக்கு ஆடமிழந்த ஏமாற்றம் அளித்தனர். அதற்குப்பிறகு களம் கண்ட விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் சேர்ந்து ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு பவுண்டரி மற்றும் சிக்ஸர்கள் விளாசினர். சூர்யகுமார் யாதவ் 36 பந்துகளில் 69 ரன்கள் குவித்தார். இதில் தலா ஐந்து பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் அடக்கம்.

விராட் கோலியும் டி20 அரங்கில் தனது 33வது அரை சதத்தை அடித்தார். 48 பந்துகளில் 63 ரன்கள் குவித்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். இதில் 3 பவுண்டரி 4 சிக்ஸர்கள் அடக்கம். இறுதியில் 19.5 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. விராட் கோலி பேட்டிங்கில் இருந்தார். டேனியல் சாம்ஸ் வீசிய முதல் பந்தை சிக்ஸர் அடிக்க, 5 க்கு 5 என ஆனது. துரதிர்ஷ்ட வசமாக விராட்கோலி இரண்டாவது பந்திலே அவுட் ஆனார். பெவிலியன் நோக்கி சென்ற அவரை தோளில் தட்டிக்கொடுத்து பாராட்டினார் ரோகித் சர்மா. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

வீடியோ: