கடைசி 5விக்கெட்டுகள்.. 138 ரன்கள்.. கேஎல்.ராகுல் ஒன்மேன் ஷோ அதிரடி சதம்.. இந்தியா முன்னேற்றம்!

0
572
Rahul

தற்பொழுது பாக்ஸிங் டே டெஸ்டில் இந்திய தென் ஆப்பிரிக்க அணிகள் தென் ஆப்பிரிக்க செஞ்சுரியன் மைதானத்தில் மோதி வருகின்றன.

நேற்று துவங்கிய இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சிக்கு சாதகமான நிலையில் டாஸ் வென்று முன்னெச்சரிக்கையாக புள்ளி விபரங்களை தாண்டி பந்து வீச்சையே தேர்வு செய்தது. புள்ளி விபரங்கள் இந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்வதை சிறந்ததாக காட்டுகின்றன.

- Advertisement -

இந்த நிலையில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ரோகித் சர்மா, விராட் கோலி என முக்கிய ஐந்து விக்கெட்டுகளை 107 ரன்களுக்கு இழந்துவிட்டது. விராட் கோலி 38 மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் 33 ரன்கள் எடுத்தார்கள்.

இந்த நிலையில் காலத்திற்கு உள்ளே வந்த கேஎல்.ராகுல் மிகப் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அத்துடன் அடிக்க வேண்டிய பந்துகளை தைரியமாக அடிக்கவும் செய்தார்.

நேற்று முதல் நாள் முடியும் பொழுது 15 பந்தில் 10 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் உடன் கேஎல்.ராகுல் 70 ரன்கள் எடுத்திருந்தார். இந்திய அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்திருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் சிராஜ் உடன் இணைந்து இரண்டாவது நாள் ஆட்டத்தை கே.எல்.ராகுல் ஆரம்பித்தார். எடுத்ததுமே அதிரடியாக ஆரம்பித்து பவுண்டரி மற்றும் சிக்ஸர் என 95 ரண்களுக்கு கேஎல்.ராகுல் நகர்ந்தார். இந்த நிலையில் சிராஜ் ஐந்து ரன்களில் ஆட்டம் இழந்தார்.

மேற்கொண்டு பிரசித் கிருஷ்ணா விளையாட வர, சதம் அடிக்கும் நெருக்கடியில் இருந்த கேஎல்.ராகுல் பேட்டிங் முனைக்கு வந்து, கோட்சி பந்தில் அதிரடியாக ஒரு சிக்சரை அடித்து 133 பந்துகளில் 14 பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர் உடன் சதம் அடித்தார். இதே மைதானத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கே.எல்.ராகுலுக்கு இது இரண்டாவது சதம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடைசி ஐந்து விக்கெட்டுகளை வைத்துக்கொண்டு 138 ரன்கள் வர காரணமாக கேஎல்.ராகுல் இருந்திருக்கிறார்.

இதற்கு அடுத்து இதே ரன்னில் கே.எல்.ராகுல் ஆட்டம் இழக்க இந்திய அணி 245 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸை முடித்துக் கொண்டது. தென் ஆப்பிரிக்க தரப்பில் ரபாடா ஐந்து விக்கெட் கைப்பற்றி இருக்கிறார்.