கடைசி 150 ரன்கள்.. 10 விக்கெட்.. புள்ளி பட்டியலில் ஆஸி அதல பாதாளம்.. தென் ஆப்பிரிக்கா உச்சம்.. இந்தியா பின்னடைவு!

0
1100
Australia

இன்று ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிக்கொண்ட மிக முக்கியமான போட்டி லக்னோவில் நடைபெற்றது.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீசுவது என தீர்மானித்தது. கேமரூன் கிரீன் மற்றும் அலெக்ஸ் கேரி இருவருக்கு பதிலாக ஸ்டாய்னிஸ் மற்றும் ஜோஸ் இங்கிலீஷ் இருவரும் ஆஸ்திரேலியா தரப்பில் வந்தார்கள். தென் ஆப்பிரிக்க தரப்பில் ஜெரால்ட் கோட்ஸிக்கு பதிலாக ஷம்சி இடம் பெற்றார்.

- Advertisement -

தென் ஆப்பிரிக்கா அணிக்கு துவக்க ஆட்டக்காரர் கேப்டன் டெம்பா பவுமா 35 ரன்கள் எடுத்து வெளியேற மற்றும் ஒரு துவக்க ஆட்டக்காரர் குயிண்டன் டி காக் 106 பந்துகளில் 108 ரன்கள் குவித்தார். இது அவருக்கு இந்த உலக கோப்பையில் தொடர்ச்சியாக இரண்டாவது சதம் ஆகும்.

இதற்கு அடுத்து வாண்டர் டேசன் 26, எய்டன் மார்க்ரம் 56, ஹென்றி கிளாசன் 29, டேவிட் மில்லர் 17, மார்க்கோ யான்சன் 26, ரபாடா மற்றும் கேசவ் மகராஜ் இருவரும் ரன்கள் ஏதும் எடுக்காமல் களத்தில் நிற்க, 50 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி, 7 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா தரப்பில் மேக்ஸ்வெல் 10 ஓவர்களில் 34 ரன்கள் மட்டும் தந்து இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.

இதற்கு அடுத்த விளையாடிய ஆஸ்திரேலியா அணிக்கு தொடர்ச்சியாக அதிர்ச்சி மட்டுமே மிஞ்சியது. அந்த அணிக்கு லபுசேன் மட்டும் 46 ரன்கள் எடுத்தார். மீதி அனைவரும் வருவதும் செல்வதுமாகவே இருந்தனர்.

- Advertisement -

மிட்சல் மார்ஸ் 7, டேவிட் வார்னர் 13, ஸ்மித் 19, ஜோஸ் இங்கிலீஷ் 5, மேக்ஸ்வெல் 3, ஸ்டாய்னிஸ் 5, ஸ்டார்க் 27, கம்மின்ஸ் 22, ஆடம் ஜாம்பா 11* ரன்கள் மட்டுமே எடுக்க, 40.5 ஓவரில் ஆஸ்திரேலியா அணி 177 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதை எடுத்து தென்னாபிரிக்க அணி 134 ரன்கள் வித்தியாசத்தில் தனது இரண்டாவது போட்டியில் இரண்டாவது வெற்றியைப் பெற்று அசத்தியது. ரபடா 3 விக்கெட்டுகள், மார்க்கோ யான்சன் கேசவ் மகராஜ், ஷம்சி மூவரும் தலா 2 விக்கெட்டுகள், லுங்கி நெகிடி 1 விக்கெட் வீழ்த்தினார்கள்.

முதல் ஆட்டத்தில் இந்திய அணி உடன் தோற்று இருந்த ஆஸ்திரேலியா அணிக்கு இது இரண்டாவது தோல்வியாகும். மேலும் ரன் ரேட் அடிப்படையிலும் மிகப்பெரிய சறுக்கலை சந்தித்து இருக்கிறது.

இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்க அணி புள்ளி பட்டியலில் நல்ல ரன் ரேட்டில் நியூசிலாந்தை கீழே இறக்கி முதல் இடத்தை பிடித்திருக்கிறது. அதே சமயத்தில் ஆஸ்திரேலியா ரன் ரேட்டில் சறுக்கி நெதர்லாந்துக்கும் கீழே ஒன்பதாவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது. பத்தாவது இடத்தில் ஆப்கானிஸ்தான் இருக்கிறது.

தற்பொழுது தென்னாப்பிரிக்க அணி முதல் இடத்திற்கு வந்திருக்கின்ற காரணத்தினால், இதற்கு அடுத்த மூன்று இடங்களில் நியூசிலாந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இருக்கின்றன. இங்கிலாந்து ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. இந்தியா நேற்றைய விட ஒரு இடம் பின்தங்கி மூன்றாவது இடம் வந்து இருக்கிறது!