லங்கா பிரீமியர் லீக்.. ஐபிஎல்-க்கு சவால் விடும் விலைக்குப் போன இலங்கை வீரர்.. ஏலத்தில் கூப்பிடப்படாத சுரேஷ் ரெய்னா!

0
15417
Lpl2023

உலகம் முழுவதும் நடத்தப்படும் டி20 லீக்குகளில் இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் மிகவும் பிரபலம் வாய்ந்ததாகவும், மிகப்பெரிய வெற்றியடைந்த தொடராகவும் இருக்கிறது.

மேலும் பல நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் தனியாக டி20 கிரிக்கெட் லீக்குகளை நடத்துவதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தி வரும் ஐபிஎல் டி20 தொடரின் வெற்றி முக்கிய காரணமாக இருக்கிறது.

- Advertisement -

தற்பொழுது ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை ஆகிய நாடுகளில் அந்தந்த கிரிக்கெட் வாரியங்களால் டி20 கிரிக்கெட் லீக் நடத்தப்படுகிறது.

இதன்படி இலங்கை கிரிக்கெட் வாரியத்தால் மூன்று ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் லங்கா பிரீமியர் லீக் டி20 தொடரின் நான்காவது சீசனுக்கான மெகா ஏலம் நேற்று நடைபெற்றது.

இந்த லங்கா பிரீமியர் லீக் டி20 தொடரில் மொத்தம் ஐந்து அணிகள் பங்கு பெற்று விளையாடுகின்றன. நடந்த மூன்று சீசன்களிலும் ஜாப்னா கிங்ஸ் பட்டத்தை வென்று அசத்தியிருக்கிறது.

- Advertisement -

நேற்று நடைபெற்ற மெகா ஏலத்தில் இந்திய முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தனது பெயரைக் கொடுத்திருந்ததாக செய்திகள் பரவியது. அதே சமயத்தில் ஏலத்தில் அவரது பெயரும் ஒரு பட்டியலில் வந்தது. ஆனால் ஏலம் நடத்துபவர் அவரது பெயரை அறிவிக்கவில்லை. இதுகுறித்து பலவாறான கருத்துக்கள் உலாவுகிறது. ஆனால் அவர் விலை போகவில்லை என்பது உண்மை கிடையாது.

இதேபோல் நேற்று நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக் மெகா ஏலத்தில் ஐபிஎல் தொடருக்கு சவால் விடும் வகையில் இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் தில்சன் மதுசங்கா 92 ஆயிரம் டாலர் விலைக்கு போய் ஆச்சரியம் அளித்தார். இது இந்திய மதிப்பில் ஏழரை கோடி ரூபாய் ஆகும். இவரை சாம்பியன் அணியான ஜாப்னா கிங்ஸ் வாங்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கொஞ்சம் கொஞ்சமாக கிரிக்கெட் என்பது டி20 கிரிக்கெட் வடிவத்தில் சுருங்குவது அல்லாமல், இப்படி தனியார் முதலாளிகள் நடத்தும் டி-20 லீக்குகளில் சுருங்கி வருவது பாரம்பரிய கிரிக்கெட் ரசிகர்களை மிகவும் கவலை உள்ளாக்கும் ஒரு செயலாக மாறி வருகிறது என்பதும் உண்மை!