5வது டெஸ்ட் போட்டி கைவிடப்பட்டதும் லாங்கஷயர் கிரிக்கெட் கிளப் செய்த நெகிழ்ச்சி சம்பவம்

0
213
Lanchasire Cricket

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட திட்டமிட்டிருந்தது. முதல் நான்கு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2-1 என முன்னிலை பெற்றிருந்தது. பரபரப்பான 5வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்று தொடரை கைப்பற்றும் என்று பலரும் நினைத்துக் கொண்டிருந்த நிலையில் கொரோனா பெருந்தொற்று காரணமாக அந்த ஆட்டத்தை கைவிடுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு அறிவித்துவிட்டது. அதுவும் ஆட்டம் தொடங்குவதற்கு சில மணி நேரங்களில் இருந்த நிலையில் இந்த முடிவு எட்டப்பட்டதால் பல ரசிகர்கள் சோகத்துடன் வீடு திரும்பினார்.

5 நாட்கள் நடைபெற வேண்டிய ஆட்டம் தடைபட்டதால் இங்கிலாந்து கிரிக்கெட் போர்டுக்கு சுமார் 200 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு வேளை இங்கிலாந்து அணி தொடரை வென்று விட்டது என்று இந்திய ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்கையில் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று இங்கிலாந்து போர்டு மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் இந்த தொடர் முடிவடையவில்லை என்றும் இரண்டு கிரிக்கெட் நிர்வாகமும் இணைந்து ஐந்தாம் போட்டியை நடத்துவதற்கு சிறந்த தருணத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

ஆனாலும் இந்த ஆட்டம் நடைபெற இருந்த மான்செஸ்டர் நகரில் நகரின் லாங்கஷயர் கிரிக்கெட் கிளப் பலரும் பாராட்டும்படியான செயல் ஒன்றை செய்துள்ளது. இந்த ஆட்டத்திற்காக வீரர்கள், பத்திரிகைக்காரர்கள் மற்றும் சில முக்கிய நபர்களுக்காக சமைத்த உணவு அதிகமாக இருந்தது. ஆட்டம் கைவிடப்பட்டதால் இந்த உணவு எல்லாம் கீழே கொட்டப் படும் சூழல் வந்தது. ஆனால் லங்காஷயர் கிரிக்கெட் கிளப் உணவை வீணடிக்காமல் அங்கிருந்த தொண்டு நிறுவனத்திற்கு அதை வழங்கி விட்டது.

இதனால் ஆட்டம் தடைபட்டாலும் பல்வேறு உதவியற்ற மற்றும் ஆதரவற்றோர் பசியில்லாது அன்றைய நாளை கழித்தனர். லாங்கஷயர் கிரிக்கெட் கிளப்பின் இந்த செயல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதன் நற்செயலை ட்விட்டரில் ட்வீட்டாக வெளியிட அதை பல்வேறு ரசிகர்கள் பகிர்ந்துகொண்டு தங்களின் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.