பின்னி எடுத்த லேடி சேவாக் செபாலி வர்மா; ஆர்சிபி-க்கு தொடரும் சோகம் – பெண்கள் ஐபிஎல்!

0
1793
WIPL

பெண்கள் ஐபிஎல் தொடர் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. டெல்லி மும்பை குஜராத் உத்தர பிரதேசம் பெங்களூர் ஆகிய ஐந்து இடங்களை மையமாகக் கொண்டு 5 அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. நேற்று பெண்கள் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் குஜராத், மும்பை அணிகள் மோதிய போட்டியில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது!

இன்று மும்பை பிரபோன் மைதானத்தில் பெங்களூர் அணியும் டெல்லி அணியும் பலப்பரீட்சை நடத்தின. டாசில் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

- Advertisement -

டெல்லி அணிக்கு துவக்க வீராங்கனைகளாக இந்திய வீராங்கனை ஷபாலி வர்மா மற்றும் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மெக் லானிங் இருவரும் களமிறங்கி அற்புதமான அடித்தளத்தை டெல்லி அணிக்கு உருவாக்கித் தந்தார்கள்.

இவர்கள் இருவரும் சேர்ந்து முதல் விக்கட்டுக்கு 162 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்து அசத்தினார்கள். மெக் லானிங் 43 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 72 ரன்கள் எடுத்தார். ஷபாலி வர்மா 45 பந்துகளில் 10 பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்களுடன் 84 ரன்கள் குவித்தார்.

இதற்கடுத்து களத்திற்கு வந்த தென்னாபிரிக்க அணியின் மரிஸானா காப் 17 பந்துகளில் மூன்று பவுண்டரி மூன்று சித்தர்களுடன் 39 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் நின்றார். இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்டரிக்யூஸ் 15 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்றார். முடிவில் டெல்லி அணி 223 ரன்களை இரண்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு சேர்த்தது. பெங்களூர் அணியின் ஹீதர் நைட் இரண்டு விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

இதற்கு அடுத்து மிகப்பெரிய இமாலய இலக்கை நோக்கி களம் இறங்கிய பெங்களூர் அணிக்கு கேப்டன் ஸ்மிருதி மந்தனா 35 ரன்கள், அலைஸ் பெரி 31 ரன்கள், ஹீதர் நைட் 34 ரன்கள், மேகன் சூட் 30 ரன்கள் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 163 ரன்களை பெங்களூர் அணி சேர்த்தது. டெல்லி அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

டெல்லி அணியில் இடம் பெற்றுள்ள அமெரிக்க இடது கை வேகப்பந்து வீச்சு வீராங்கனை டாரா நொரிஸ் நான்கு ஓவர்கள் பந்து வீசி 29 ரன்கள் மட்டுமே விட்டுத் தந்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி பெங்களூர் அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

இதைத்தொடர்ந்து விடுமுறை நாளான ஞாயிறு என்று இரண்டாவது போட்டியில் உத்தரப்பிரதேச அணியும் குஜராத் அணியும் மோதிக்கொள்ள இருக்கின்றன. குஜராத் அணி முதல் போட்டியில் மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் தோற்றுள்ள காரணத்தால் இந்த போட்டியில் வெல்ல வேண்டியது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது!