ஐபிஎல் 2025

சேப்பாக் பிட்ச் ரகசியம்.. அதனால சிஎஸ்கே-ல இந்த 2 பேர் என்ன பண்றாங்கனு பாக்கணும் – எல் பாலாஜி பேச்சு

2025ஆம் ஆண்டு 18வது ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணிக்கு குறிப்பிட்ட இரண்டு வீரர்கள் விளையாடுவதை தான் பார்க்க விரும்புவதாக இந்திய மற்றும் தமிழக முன்னாள் வேகபந்துவீச்சாளர் லட்சுமிபதி பாலாஜி கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்த முறையும் சிஎஸ்கே அணி நிர்வாகம் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களை நம்பி பெரிய அளவில் வாங்கி இருக்கிறது. கடந்த முறை போலவே இந்திய அணிக்கு விளையாடாத இளம் வேகப்பந்து வீச்சாளர்களை அணிக்குள் கொண்டு வந்திருக்கிறது. வழக்கம்போல் இவர்களை சிறந்த முறையில் வெளிப்படுத்துவதற்கு சிஎஸ்கே அணி நிர்வாகம் பின்னணியில் வேலைகள் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ரெண்டு பேர பாக்கணும்

இது குறித்து லட்சுமிபதி பாலாஜி பேசும்பொழுது “நான் முதலில் சிஎஸ்கே அணியில் அன்சுல் காம்போஜ் விளையாடுவதை பார்க்க விரும்புகிறேன். ஏனென்றால் சென்னை சேப்பாக்கத்தில் எப்பொழுதும் புதிய பந்து மிகவும் முக்கியமான விஷயம். தற்போது மீண்டும் சென்னை சேப்பாக்கம் ஆடுகளத்தில் பவுன்ஸ் சிறப்பான முறையில் உருவாகி இருக்கிறது. முன்பு பவுன்ஸ் குறைவாகிக் கொண்டிருந்தது”

“எனவே இந்த முறை அன்சுல் காம்போஜ் நல்ல முறையில் செயல்பட முடியும். சென்னை சேப்பாக்கத்தில் மாலை நேரத்தில் பந்து வீச அவர் விரும்புவார். புதிய பந்தை வீசும் திறன் இதனால் அங்கு அவருக்கு அதிகம் கிடைக்கும். மேலும் தமிழக இடது கை வேகப்பந்து வீச்சாளர் குல்ஜப்னித் சிங் உடல் தகுதியுடன் இருந்தால் இவர்கள் இருவரும் சிஎஸ்கே அணிக்காக விளையாடுவதை பார்க்க ஆர்வமாக இருக்கிறேன்”

- Advertisement -

பதிரனா பிராவோ கிடையாதுதான்

“இந்த முறை பதிரனா நிச்சயமாக ஃபிட்டாக இருக்கிறார். எனவே இறுதிகட்ட ஓவர்களில் அவர் நல்ல தற்காப்பு பந்துவீச்சாளர். பிராவோ என்ன செய்து வந்தாரோ அதை இவர் இப்பொழுது செய்து கொண்டிருக்கிறார். ஆனால் பிராவோ நிச்சயமாக பேட்டிங்கிலும் பங்களிப்பு தந்த ஒரு ஆல்ரவுண்டர் என்பது வேறு”

இதையும் படிங்க : புதிய கேப்டனை அறிவித்த ராஜஸ்தான் ராயல்ஸ்.. சாம்சனும் ஆடுவார் என தகவல்.. காரணம் என்ன?

“ஆனால் பதிரனா அணியின் வெற்றிக்கு தேவைப்படும் முக்கியமான ஷட் டவுன் ஓவர்களில் மிகவும் அருமையாக செயல்பட்டு வெற்றியைத் தேடித் தந்திருக்கிறார். எனவே அவர் நல்ல உடல் தகுதியுடன் இருப்பது சிஎஸ்கே பவுலிங் யூனிட்டை வலிமையானதாக மாற்றுகிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by
Tags: CSKL Balaji